மத்திய எரிவாயு விநியோக நிறுவனங்களின் விலை மாற்ற அறிவிப்புக்கு பின்பு சென்னையில் இன்று (மார்ச் 7) வீட்டில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.928.50 ஆக உள்ளது. இதுவே டெல்லியில் ரூ.913, மும்பையில் ரூ.912.50, கொல்கத்தாவில் ரூ.939 ஆக இருக்கிறது. இந்த வேறுபாடு மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய ஆயில் கார்ப்பரேஷன் (IOC) இணையதள தகவலின்படி, எல்பிஜி விலை மாநில விற்பனை வரி (VAT) மற்றும் உள்ளூர் லாஜிஸ்டிக் செலவுகளைப் பொறுத்து மாறுபடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், விலை தொடர்ந்து உயர்ந்தே இருக்கிறது. இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.

பைப்லைன் வசதி இல்லாதது
தமிழ்நாட்டில் எல்பிஜி விநியோகத்துக்கு வலுவான பைப்லைன் வசதி இல்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்து எல்பிஜியை ரயில் அல்லது சாலை வழியாகவே கொண்டு வர வேண்டியுள்ளது. இதனால் உள்நாட்டு போக்குவரத்து செலவு (inland logistics cost) அதிகமாகிறது. இந்த கூடுதல் செலவு நுகர்வோருக்கு சிலிண்டர் விலையாக சேர்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயமும் போக்குவரத்து செலவுகள் அடிப்படையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இறக்குமதி மற்றும் தெற்கு மாநிலங்கள்
தமிழ்நாடு தெற்கு மாநிலமாக இருப்பதால், எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி அதிக கடல் போக்குவரத்து செலவை ஏற்படுத்துகிறது. நாட்டின் பெரும்பாலான எல்பிஜி மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து (குறிப்பாக கத்தார்) இறக்குமதி செய்யப்படுகிறது. இவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகின்றன. இந்த பாதையில் ஏற்படும் பதற்றங்கள் இறக்குமதி செலவை மேலும் உயர்த்துகின்றன.
அப்படி இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான இயற்கை எரிவாயு குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் இறக்குமதி துறைமுகங்கள் (டாஹெஜ் போன்றவை) இறக்குமதி செய்யப்படுகிகிறது. இதன் காரணமாக மேற்கு மாநிலங்களில் போக்குவரத்து செலவுகள் குறைந்து குறைவான விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இதுவே தெற்கு மாநிலங்கள் எனில் போக்குவரத்து செலவுகள் காரணமாக விலை சற்று அதிகமாக இருக்கிறது.
மாநில வரி மற்றும் ஜிஎஸ்டி வேறுபாடு
எல்பிஜி சிலிண்டர்கள் முழு இந்தியாவிலும் 5% ஜிஎஸ்டி-யின் கீழ் வருகின்றன. ஆனால் மாநில விற்பனை வரி (VAT) மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இயற்கை எரிவாயு (DPNG மற்றும் CNG) மீது 5% VAT உள்ளது. இது மற்ற மாநிலங்களில் சற்று அதிகம்.
ஆனால் எல்பிஜி விலையில் உள்ளூர் வரி மற்றும் லாஜிஸ்டிக் செலவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மக்களுக்கு என்ன பொருள்?
சென்னையில் வசிப்பவர்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.15-ரூ.25 அதிகமாக இருப்பது குடும்ப பட்ஜெட்டை பாதிக்குமா என்றால் வாய்ப்புகள் குறைவு என்பது தான் உண்மை, காரணம் பெட்ரோல், டீசல் போல் தினமும் பயன்படுத்துவது அல்லாமல் சிலிண்டர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 45-60 நாட்களுக்கு ஒரு முறை வாங்கும் பொருள். இதனால் 25 ரூபாய் வித்தியாசம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தால், தற்போது எல்பிஜி விலை உயர்வது போல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் பெட்ரோல்-டீசல் விலையையும் பாதிக்கலாம். இது உணவு, போக்குவரத்து, இறக்குமதி பொருட்கள் விலையையும் உயர்த்தும்.
முக்கிய திட்டம்
இந்தியா பயன்படுத்தும் எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயுவில் பெரும்பகுதி சவுதி அரேபியா, கத்தார் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த எரிவாயு முதலில் மும்பை மற்றும் குஜராத் துறைமுகங்களில் இறக்கப்படுகின்றது. பின்னர் மங்களூர், கொச்சி, தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கப்பல்கள் கிழக்கு கடற்கரை வரை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதால் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கின்றன. இதற்கு மாறாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளுக்கு எரிவாயு குழாய் (pipeline) மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தச் சவால்களை சமாளிக்க Kochi-Salem Pipeline Private Limited (KSPPL) என்ற நிறுவனம் 459 கிலோமீட்டர் நீளமுள்ள எல்.பி.ஜி குழாய் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) மற்றும் பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனங்கள் இணைந்து 50:50 கூட்டுத்திட்டமாக இதை முன்னெடுத்து வருகின்றன.
இந்த பைப்லைன் திட்டம் கொச்சி ரிஃபைனரியிலிருந்து பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு வழியாக சேலம் வரை எரிவாயுவை கொண்டு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1.53 மில்லியன் டன் எரிவாயுவை கடத்தும் திறன் இதற்கு உள்ளது.
2025 அக்டோபர் நிலவரப்படி, இந்த திட்டத்தின் கேரளாவில் உள்ள சுமார் 203 கிலோமீட்டர் பகுதி முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் பாலக்காடு முதல் சேலம் வரை உள்ள 256 கிலோமீட்டர் பகுதி பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தை 2026 மார்ச் 31க்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவேறிய பிறகு தமிழ்நாட்டில் எல்.பி.ஜி விநியோகம் வேகமாகவும் குறைந்த செலவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தப்பித்த பெங்களூர்.. சிக்கிய சென்னை.. படுத்தேவிட்டது ரியல் எஸ்டேட்..!!

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications