சிலிண்டர் விலை முதல் ஆதார் அட்டைகள் வரை.. நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!!

நவம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல முக்கியமான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. ஆதார் கார்டு தொடங்கி வங்கி கணக்குகளில் நாமினிகளை நியமனம் செய்வது வரை பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலேயே நேரடியாக தாக்கம் கொண்டவை என்பதால் இவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

சிலிண்டர் விலை: வழக்கமாக மாதத்தின் முதல் நாளில் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். சிலிண்டர் விலை உயரம் அல்லது இறங்கலாம் அந்த வகையில் சிலிண்டர் விலை உயர்ந்தால் அது நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் . எனவே மாதத்தின் தொடக்க நாளில் சிலிண்டர் விலை குறித்து கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

சிலிண்டர் விலை முதல் ஆதார் அட்டைகள் வரை.. நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!!

ஆதார் கார்டு: இந்தியாவில் நாம் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டை பயன்படுத்துகிறோம். ஆதார் கார்டில் முக்கியமான மாற்றங்கள் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி பெரியவர்கள் தங்களின் ஆதார் அட்டையில் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றம் செய்ய இனி சப்போர்ட்டிங் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டாம். நாம் விண்ணப்பம் செய்தால் தானாகவே யுஐடிஏஐ அமைப்பு அரசு தளங்களில் இருந்து தகவல்களை எடுத்து கொள்ளும்.

ஆதார் கட்டணம்: ஆதார் அட்டையில் பொதுவாக பெயர் ,பிறந்த தேதி ,முகவரி ,மொபைல் எண் உள்ளிட்டவற்றை மாற்றம் செய்வதற்கு இதற்கு முன்பு வரை 50 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டது இனி 75 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . அதேபோல பெரியவர்களுக்கு பயோமெட்ரிக் தகவல்களான கருவிழி, கைவிரல் ரேகை ,புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்ற வேண்டும் என்றால் 100 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 125 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் ஆதார்: 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் அட்டையில் அவர்கள் 7 வயது முடிவதற்குள் பயோமெட்ரிக் தகவல்களை அப்டேட் செய்வது கட்டாயம். இல்லை என்றால் ஆதார் அட்டையே செயலிழந்து விடும். அதே போல 15 வயது எட்டிய பிறகு புகைப்படம் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்வது கட்டாயம். இதுநாள் இதற்கு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் அக்டோபரில் இருந்தே குழந்தைகள் ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அது நவம்பர் மாதமும் தொடர்கிறது. உங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் தரவுகள் அப்டேட் செய்யப்படவில்லை எனில் இலவசமாகவே அதனை செய்து கொள்ளுங்கள்.

சிலிண்டர் விலை முதல் ஆதார் அட்டைகள் வரை.. நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள்!!

வங்கி கணக்குகளில் நாமினி: பொதுவாக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களுக்கு என நாமினிகளை நியமனம் செய்யலா வேண்டும். நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒரு வங்கி கணக்குக்கு ஒரே சமயத்தில் நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்ய முடியும். அதே போல தங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை இந்த நான்கு பேரும் எவ்வளவு சதவீதத்தில் பிரித்துக் கொள்ளலாம் என்பதையும் முடிவு செய்து வங்கிகளிடம் அதற்கான தகவல்களை சமர்ப்பிக்கலாம். எனவே வங்கி கணக்குகளில் நீங்கள் நான்கு நாமினிகள் வரை நியமனம் செய்து கொள்ள முடியும்.

என்பிஎஸ் Vs யுபிஎஸ்: மத்திய அரசு ஊழியர்கள் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஒய்வூதிய திட்டத்திலிருந்து யுபிஎஸ் எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வேண்டும் என்றால் நவம்பர் 30ஆம் தேதிக்குள் அதனை செய்து முடித்தாக வேண்டும்.

ஓய்வூதியதாரர்கள்: ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் Life certificate தாக்கல் செய்ய வேண்டும். இந்த நவம்பர் மாத இறுதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய வங்கி கிளையில் தங்களுக்கான Life certificate -ஐ கட்டாயம் தாக்கல் செய்தாக வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்றால் ஓய்வூதிய தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+