மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரத்தில் 22 சதவீதம் உயர்ந்துள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 69 டாலரில் இருந்து 84.5 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

ஈரானின் பதிலடி தாக்குதல்களும், ஹார்முஸ் ஜலசந்தி நீர்வழி பாதையை மூடல் அச்சுறுத்தலும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளன. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 88 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது வாயிலாக ஈடு செய்யும் நிலையில், இந்த விலை உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

இந்தியாவுக்கு என்ன ஆபத்து?
கச்சா எண்ணெய் விலை உயர்வால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். இது இந்தியாவில் பணவீக்கத்தை அதிகரிக்கும், இதேபோல் உற்பத்தி செலவுகள், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து பொருட்களின் விலையை உயர்த்தும். பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போது எரிபொருள் விலை உயர்வது இயல்பு.

ஆனால், இந்தியாவில் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சில பல காரணங்களும் உள்ளது.

இந்திய ரீடைல் சந்தையில் 2022 ஏப்ரல் முதல் பெட்ரோல்-டீசல் விலை மாற்றப்படவில்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) விலை உயரும் போது இழப்பையும், குறையும் போது லாபத்தையும் சந்திக்கின்றன. இதை மத்திய அரசு கவனமாக கட்டுப்படுத்தி தொடர்ந்து செலவுகளை முழுமையாக ஈடு செய்து லாபத்தை அளவுகளை தக்க வைத்து வருகிறது.

2022-ல் கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த போது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்த விலை தான் இன்றும் தொடர்கிறது. இதனால் போதுமான Buffer இருக்கும், ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைந்த காரணத்தால் இந்த Buffer அளவு குறைந்திருக்க கூடும். இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

தேர்தல் காலத்தில் அரசு எச்சரிக்கை
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், எதிர்க்கட்சிகள் இதை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமானதாக பயன்படுத்தும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உள்ளது.

இதனால், பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கச்சா எண்ணெய், எல்பிஜி உள்ளிட்ட பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் விலையை கண்காணிப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆபத்து
கச்சா எண்ணெய் தாண்டி இந்தியாவுக்கு, எல்பிஜி (கேஸ் சிலிண்டர்) மற்றும் எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்தியா தனது எல்பிஜி தேவையில் சுமார் 80-85 சதவீதத்தை அரபு நாடுகளில் இருந்து பெறுகிறது.

இவற்றில் பெரும்பாலானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் வருகின்றன. இந்த பாதை மூடப்பட்டால் எல்பிஜி பற்றாக்குறை ஏற்படும். இந்தியாவிடம் எல்பிஜிக்கு பெரிய இருப்பு இல்லை. அதேபோல, எல்என்ஜி தேவையில் 60 சதவீதம் ஹார்முஸ் வழியாக வருகிறது.

கத்தார் எல்என்ஜி உற்பத்தி நிறுத்தம்
ஈரானிய ட்ரோன் தாக்குதலால் உலகின் மிகப்பெரிய எல்என்ஜி ஏற்றுமதி நிலையமான கத்தார்எனர்ஜி தனது உற்பத்தியை மொத்தமாக நிறுத்தியுள்ளது. கத்தார் உலகின் ஐந்தாவது பெரிய எல்என்ஜி உற்பத்தியாளராக உள்ளது. உற்பத்தி குறைவால் விநியோகம் பாதிக்கப்படும். இது இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வருகிறது.

பெட்ரோல்-டீசல் இருப்பு போதுமானது
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இந்தியாவிடம் 70-80 நாட்கள் இருப்பு உள்ளது. கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து பெரிய அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் இப்போது பெரிய அச்சம் தேவையில்லை என கருத்து நிலவுகிறது. ஆனால், ஈரான் மோதல் நீடித்தால் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

ஈரான்-அமெரிக்கா மோதல் இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை தூண்டலாம், பணவீக்கம் அதிகரித்தால் பொருட்களின் விலை உயர்ந்து நடந்தால் ரீடைல் மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும்.

அரசு பெட்ரோல்-டீசல் விலையை உடனடியாக உயர்த்தாது என்றாலும், எல்பிஜி மற்றும் எல்என்ஜி பற்றாக்குறை ஏற்படலாம். முதலீட்டாளர்கள் இந்த சூழலை கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+