2026ஆம் ஆண்டு இப்போதுதான் தொடங்கியது போல இருக்கிறது, ஆனால் அதற்குள் இரண்டு மாதங்கள் முடிந்து விட்டன. நாளை மறுதினம் மார்ச் மாதம் பிறக்கிறது. மார்ச் 1ஆம் தேதியில் இருந்து நாட்டில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையிலே தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதால் இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்ப தங்களுடைய பட்ஜெட்டை திட்டமிடுவது நல்லது.
ரயில் டிக்கெட்: அடிக்கடி ரயில்களின் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு மார்ச் 1ஆம் தேதியிலிருந்து மிக முக்கியமான ஒரு மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இனி யுடிஎஸ் செயலி செயல்படாது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து பயணிகள் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள், பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை எடுப்பதற்கு யுடிஎஸ் செயலியை பயன்படுத்த முடியாது அதற்கு மாற்றாக ரயில் ஒன் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ரயில் ஒன் செயலியில் அனைத்து ரயில் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விட்ட சூழலில் மக்களிடையே அதனை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வே யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை பிப்ரவரி 28ஆம் தேதி உடன் நிறுத்துகிறது. எனவே மார்ச் ஒன்றாம் தேதியிலிருந்து நீங்கள் பிளாட்பார்ம் டிக்கெட் மற்றும் சீசன் பாஸ் ,அன் ரிசர்வ்டு டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரயில்ஒன் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும்.
சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவை சேர்ந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு மற்றும் வணிக ரீதியிலாக பயன்படுத்தப்படும் எரிவாயுக்களின் விலைகளை மாற்றம் செய்யும். சில சமயம் விலை அப்படியே நீடிக்கலாம், சில சமயம் விலை குறைக்கப்படலாம் அல்லது உயர்த்தப்படலாம். இதில் எது நடந்தாலும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் சிலிண்டர் விலைகளை கவனமாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

அகவிலைப்படி: வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அவர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை எப்போதுமே அரசு மார்ச் மாதத்தில் தான் வெளியிடும். குறிப்பாக ஹோலி பண்டிகையை முன்னிட்டு அதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இது ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பளம் மற்றும் ஓய்வூதியத் தொகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வாட்ஸ் அப் & சிம் கார்டு : மத்திய அரசின் புதிய சிம்கார்டு பைண்டிங் விதிமுறையும் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது உங்களுடைய தொலைபேசியில் இருந்து சிம் கார்டை அகற்றி விட்டால் whatsapp போன்ற செயலிகள் வேலை செய்யாது. டிஜிட்டல் சார்ந்த மோசடிகளை தடுக்க இந்த நடைமுறையை அரசு கொண்டுவர இருக்கிறது.
எனவே சிம் பைண்டிங் விதிமுறைகள் வரும் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்றன. வாட்ஸ் அப் வெப் சேவைகள் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் ஆகிவிடும் பயனர்கள் மீண்டும் அதனை லாகின் செய்து கொள்ள வேண்டி இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications