நவம்பர் மாத இறுதி நெருங்கிவிட்ட நிலையில், அரசு மற்றும் நிதி துறைகள் தொடர்பான பல முக்கியமான காலக்கெடுக்கள் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்த காலக்கெடுவுக்குள் தங்கள் பணிகளை முடிக்காதவர்கள், கடைசி நாளான நவம்பர் 30-க்குள் அவற்றை முடிப்பது அவசியம் ஆகும். இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் அமலுக்கு வரும் வழக்கமான மாற்றங்களின்படி, டிசம்பர் 1ஆம் தேதி முதல் பல முக்கிய விதிகள் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (UPS) : அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய முறையான NPS-இன் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்வு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 30 ஆகும். இந்த காலக்கெடு இதற்கு முன்பு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த விருப்பம் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுவதால், நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறினால், டிசம்பர் 1 முதல் இந்த வாய்ப்பு கிடைக்காது.

வரி தொடர்பான ஆவணங்களுக்கு காலக்கெடு : அக்டோபர் 2025-இல் டிடிஎஸ் (TDS) கழிக்கப்பட்டிருந்தால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S-இன் கீழ் அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியும் நவம்பர் 30 ஆகும். மேலும், சர்வதேச குழுக்களின் தொகுதி நிறுவனங்களுக்கு படிவம் 3CEAA ஐச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கான ஆயுள் சான்றிதழ் : ஓய்வூதியம் பெறுவோர் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டிய ஆயுள் சான்றிதழை (Life Certificate) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிகிறது. எனவே, உரிய நேரத்தில் சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால், டிசம்பர் மாதம் முதல் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் நிறுத்தப்படலாம். ஓய்வூதியதாரர்கள் தங்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை (ஜீவன் பிரமான்) வீட்டில் இருந்தே உருவாக்கி சமர்ப்பிக்க முடியும்.
டிசம்பர் 1 முதல் விலை மாற்றங்கள் :
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சில எரிபொருள் விலைகளைத் திருத்தி வெளியிடுவது வழக்கம்.
எல்பிஜி சிலிண்டர் விலை : டிசம்பர் 1ஆம் தேதி, எல்பிஜி. சிலிண்டர் விலைகள் புதுப்பிக்கப்படும். நவம்பர் 1, 2025 அன்று, 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.50 வரை குறைக்கப்பட்ட நிலையில், டிசம்பரில் விலை குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது தெரியவரும்.
8-வது ஊதியக்குழு : மத்திய அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும் வகையில், 8-வது ஊதியக்குழு அமைப்பதற்கான பரிந்துரைகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் டிசம்பர் மாதத்தில் எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
8-வது ஊதியக் குழு அமைக்கும் பணி தொடர்பான விதிமுறைகளில் கோரப்பட்ட மாற்றங்களுக்கு மத்திய அரசு டிசம்பரில் ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான எரிபொருள் விலை : எல்பிஜி போலவே, விமான விசையாழி எரிபொருளான ஏ.டி.எஃப் (ATF) விலைகளிலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் திருத்தம் செய்யப்படும். இந்த விலை திருத்தங்கள் விமானப் போக்குவரத்து செலவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications