பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் "நமோ"

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்னோவேஷன் (Innovazion), தான் கண்டுபிடித்துள்ள புதிய ஆண்டி-வைரஸ் மென்பொருளுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் செல்ல பெயராக கருதப்படும் 'நமோ' என்று பெயரிட்டுள்ளது.

கணிணிகளை பயன்படுத்துவர்கள், மால்வேர் மற்றும் வைரஸ் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான பாதுகாப்பு மென்பொருளை இலவசமாக வழங்கும் நோக்கில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் கம்ப்யூட்டர்

ஆப்பிள் கம்ப்யூட்டர்

தற்போதைய வெளியீடு ஒரு அடிப்படையான பாதுகாப்புகளை மட்டுமே வழங்கும் என்ற போதிலும், இந்நிறுவனம் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களுக்கும் பயன் தரும் வகையில் புதிய முன்னோடி படைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இப்போதைய மென்பொருளுக்கு தொடர்ச்சியான அப்டேட்ஸ்களும் கிடைக்கும்.

புள்ளி விபரம்

புள்ளி விபரம்

'இன்டெர்நெட் பயனாளிகளைப் பொறுத்த வரையில், இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. எனினும், 13 சதவீதம் பேர் மட்டுமே உரிமம் பெற்ற ஆண்டி-வைரஸ் மென்பொருள்களையும் மற்றும் 30 சதவீதத்தினர் சோதனை படைப்புகளையும் மீண்டும் மீண்டும் அமைத்தும் பயன்படுத்தி வருகின்றனர்' என்று இன்னோவேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அபிஷேக் காங்நேஜா பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார்.

இலவச ஆண்டி வைரஸ்

இலவச ஆண்டி வைரஸ்

எனினும், மீதமுள்ள 57 சதவீதம் பேர் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலோ அல்லது தங்களுடைய கம்ப்யூட்டரின் பாதுகாப்புக்கு பெயர் தெரியாத அப்ளிகேஷன்களையுமே பயன்படுத்தி வருகிறார்கள். "நமோ" ஆண்டி-வைரஸ் இந்த பிரிவினரைக் குறிவைத்தே வெளியிடப்பட்டிருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

அரசியல் தொடர்பு

அரசியல் தொடர்பு

இன்னோவேஷன் நிறுவனத்திற்கு எந்தவிதமான அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகள் இல்லை என்றும் காங்நேஜா விளக்கினார்.

நல்ல மணம்.. நல்ல முயற்சி..

நல்ல மணம்.. நல்ல முயற்சி..

'இந்த மென்பொருளை உருவாக்கியதன் மூலமாக, நாங்கள் அரசாங்கத்தை பாராட்ட விரும்புகிறோம். மேலும், நாடு அவர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறது என்ற தகவலை தெரிவிக்கவும் விரும்புகிறோம்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

திறன்

திறன்

வைரஸ்களின் தாக்குதல்களை உடனடியாக கண்டறிதல், இன்டலிஜன்ட் ஸ்கேனிங், விருப்பத்திற்கேற்ப கண்டறிதல் போன்ற அம்சங்களையும் மற்றும் வன்தகட்டில் குறைந்த பகுதியில் இந்த மென்பொருள் அடங்கும் வகையிலும் இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here's another entity NaMo will protect you from: Virus attacks

Homegrown IT firm Innovazion has named its new antivirus software 'NaMo', the popular short name of Prime Minister Narendra Modi.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X