இ-காமர்ஸ் துறையில் இறங்க பேஸ்புக் திட்டம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹூஸ்டன்: பிரபல சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக், கலிபோர்னியாவில் இந்தியர்களால் துவங்கப்பட்ட "தி ஃபைன்ட்" என்னும் ஷாப்பிங் சர்ச் இன்ஜின் நிறுவனத்தைக் கைபற்றியது.

இதன் மூலம் இ-காமர்ஸ் துறையில் இறங்க பேஸ்புக் திட்டமிட்டு வருவதாக செய்யதிகள் வெளியாகியுள்ளது.

இப்புதிய நிறுவனத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து பேஸ்புக், தேடுதல் மற்றும் இ-காமர்ஸ் விளம்பரத்தின் அதிகளவிலான கவனம் செலுத்தி வருகிறது.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

ஆன்லைன் ஷாப்பிங் பழக்கம் மக்கள் மத்தியில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபத்தை அளிக்கும் இந்நிறுவனத்தை சிவக்குமார் மற்றும் சசிகாந்த் கந்தல்வால் ஆகிய இரு இந்தியர்கள் 2006ஆம் வருடம் கலிபோர்னியாவில் தொடங்கினர்.

"தி ஃபைன்ட்"

இண்டர்நெட்டில் பல ஷாப்பிங் தளம் இருக்கும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரம் மற்றும் அதிக சலுகைகள் கொண்ட பொருட்களை பட்டியல் போட்டுக் காட்டுகிறது இந்நிறுவனம்.

இதேபோன்ற போன்ற சேவையை பேஸ்புக் தளத்திலும் கொண்டு வரவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது பேஸ்புக் நிர்வாகம்.

 

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

2014ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் விளம்பர வருவாய் 12.6 பில்லியன் டாலர் அளவை எட்டியது.

பேஸ்புக் விளம்பரங்கள்

பேஸ்புக் விளம்பரங்கள்

இந்நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் தி ஃபைன்ட் தொழில்நுட்பத்தை பேஸ்புக் தளத்தில் செயல்படுத்தி, பேஸ்புக் பக்கத்தில் காண்பிக்கப்படும் விளம்பரங்கள் அதன் பயனாளர்களுக்குத் தேவையான விளம்பரமாக மாற்றப்படும் என பேஸ்புக் தெரிவித்திருந்தது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

தி ஃபைன்டை கைப்பற்றுவதன் மூலம் அதன் பணியாளர்கள் பேஸ்புக் நிறுவனத்தில் இணைகிறார்கள். மேலும் அடுத்த சில நாட்களுக்கு நிறுவனத்தின் சேவை தற்காலிகமாகத் தடைப்படும் என தி ஃபைன்ட் தனது இணையபக்கத்தில் தெரிவித்திருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Facebook acquires The Find; moves into e-commerce

Social networking giant Facebook embraced e-commerce after it acquired shopping search engine ‘TheFind’, signalling its aspirations in two of the Internet’s biggest money-makers: search and e-commerce.
Story first published: Monday, March 16, 2015, 13:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X