கிறிஸ்டின் லகார்ட்-வின் பணிக்காலம் முடிந்தது.. புதிய தலைவரை தேடும் பணியில் ஐஎம்எஃப்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: ஐஎம்எஃப் என்று அழைக்கப்படும் சர்வதேச நாணய நிதியம் அமைப்பின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட்-வின் பதவிக் காலம் வருகிற ஜூலை மாதம் முடிவடைவதால், புதிய தலைவரை தேடும் பணியில் ஐஎம்எஃப் இறங்கியுள்ளது.

இவ்வமைப்பிற்குப் புதிய தலைவரை தேடும் பணியில் இறங்கியுள்ள ஐஎம்எஃப், ஜனவரி 21 முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரையிலான விண்ணப்பங்களைப் பெற தயாராக உள்ளது.

3 விண்ணப்பங்கள்

3 விண்ணப்பங்கள்

இந்நிலையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை 24 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்து 3 விண்ணப்பங்களைக் கடைசி நிலைக்குத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளது.

இத்தேர்வு பணி வருகிற மார்ச் 3ஆம் தேதிக்கு முடிவுக்கவும் ஐஎம்எஃப் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.

 

ஜூலை 5

ஜூலை 5

இந்நிலையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரின் பணி வருகிற ஜூலை 5ஆம் தேதி துவங்கும் என ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.

கிறிஸ்டின் லகார்ட்

கிறிஸ்டின் லகார்ட்

2015ஆம் ஆண்டில் கிறிஸ்டின் லகார்ட் வெளிப்படையாகவே தான் அடுத்த முறையும் ஐஎம்எஃப் அமைப்பின் தலைவராகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்.

நிதியமைச்சர்

நிதியமைச்சர்

கிறிஸ்டின் லகார்ட் முன்னாள் பிரான்ஸ் நாட்டு நிதியமைச்சர் ஆவார். 2011ஆம் ஆண்டு முதல் ஐஎம்எஃப் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஐஎம்எஃப் அமைப்பின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The International Monetary Fund (IMF) on Wednesday kicked off the selection process for its next managing director to replace Christine Lagarde, whose term expires in July.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X