தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.. வெள்ளி விலையும் 41,000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையாக உள்ள நிலையில் இந்தியாவில் உள்ளூர் தங்க நகை வியாபாரிகள் குறைவான அளவிலேயே வாங்கியதால் கிராமுக்கு 250 ரூபாய் எனச் சரிந்து 10 கிராம் 24 கார்ட் தங்கள் 31,200 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலையானது 41,000 ரூபாயில் இருந்து 350 ரூபாய் சரிந்து 40,650 ரூபாய் கிலோ என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்குவதில் நாட்டம் காட்டாததே காரணம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை 0.15 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் தங்கம் 1,349.30 டாலராக உள்ளது. வெள்ளி விலை 0.72% உயர்ந்து அவுன்ஸ் 17.38 டாலராக உள்ளது.

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 2922 ரூபாய் என்றும் சவரன் 23,376 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிராம் 24 காரட் தங்கம் 3068 ரூபாய் என்றும் 8 கிராம் 24,544 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Gold prices drop by Rs250, silver below Rs41,000