தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பயன்கள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்பிஎஸ்(NPS) என்றழைக்கப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம், இபிஎஃப் மற்றும் பிபிஎஃப் போன்ற வழக்கமான ரிட்டையர்மெண்ட் திட்டங்களைக் காட்டிலும் நீண்ட கால அவகாசத்தில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு ரிட்டையர்மெண்ட் திட்டமாகும். நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக இருப்பதினால், ஈக்விட்டியாக கிடைக்கக்கூடிய தொகையை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

தற்போது தேசிய ஓய்வூதியத் திட்டம், இஇடி நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இஇடியில், நிதிக்கான பங்களிப்புக்கு, 80சி பிரிவின் கீழ் பிடித்தம் அனுமதிக்கப்படுகிறது; ரிட்டர்ன்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. ஆனால் இத்திட்டத்திலிருந்து விலக நேரும் பட்சத்தில், ரிட்டர்ன்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள டைரக்ட் டாக்ஸஸ் கோட்-இன் கீழ், பிராவிடண்ட் ஃபண்ட் மற்றும் பிபிஎஃப் ஆகியவற்றைப் போன்றே, என்பிஎஸ்-உம் வரி விதிப்பில் இஇஇ அந்தஸ்தைக் கொண்டிருக்கும் படி கூறப்பட்டுள்ளது.

மேற்கூறிய வரி விலக்குகள் மட்டுமல்லாது, என்பிஎஸ் மூலம் கார்ப்பொரேட் ஊழியர்கள் பயனடையக் கூடிய மற்றொரு வழியும் உள்ளது. கார்ப்பொரேட் மாடலின் கீழ், ஊழியர்களின் சார்பில் நிறுவனத்தாரால் செய்யப்படும் என்பிஎஸ் பங்களிப்புகளுக்கு, அரசாங்கம் சிறப்பு வரி விலக்குகளை வழங்குகிறது. இதன் கீழ், ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தார் ஆகிய இருவரின் பங்களிப்புகளும் வரிப் பயன்கள் தரக்கூடிய தகுதி படைத்தவையாகும்.

பேசிக் மற்றும் டியர்னஸ் அலவன்ஸ் இல் சுமார் 10% வரை செய்யப்படும் ஊழியரின் பங்களிப்புக்கு, சுமார் 1 லட்ச ரூபாயை உச்சபட்ச வரையறையாகக் கொண்டிருக்கும் 80சிசிடி பிரிவின் கீழ் பிடித்தம் செய்யப்படுகிறது. அதனால் சம்பளத்தின் ஒரு பகுதியாக என்பிஎஸ் தேர்வு செய்வதன் மூலம் விதிக்கப்படும் வரிச்சுமையை சற்றே குறைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax benefits of the National Pension System

NPS or National pension System as a retirement scheme has definite ability to outperform the regular retirement investments options such as EPF and PPF over a longer duration. An element of equity would augur well since the investment is for the long term.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X