தங்கம் மீது தீராத காதல் கொண்ட இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் தங்கத்தின் மீது கொள்ளை பிரியம் உள்ளவர்கள் எனலாம். அணிகலன்களாகப் பயன்படுத்துவது, கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவது, நன்கொடை அளிப்பது, ஆபத்துக் காலத்திற்கு அடைமானம் வைக்கப் பயன்படுத்துவது எனப் பலவற்றுக்கு இந்தியர்கள் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.

திருவிழா முதல் திருமணம் வரித் தங்கம் இல்லாமல் இந்தியா செயல்படாது. எனவே இந்தியர்கள் ஏன், தங்கத்தை விரும்புகின்றார்கள் என்று சில முக்கியக் காரணங்களை இங்குப் பார்ப்போம்.

உலகத் தங்க கவுன்சில்

உலகத் தங்க கவுன்சில்

உலகத் தங்க கவுன்சில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் 2017-ம் ஆண்டு இந்தியாவில் 650-670 டன்கள் வரை தங்கத்தின் மீதான தேவை இருக்கும் என்று கூறியுள்ளது.

திருமணங்கள்

திருமணங்கள்

இந்திய திருமணங்கள் என்றால் அதில் தங்கத்தின் தேவை முக்கியமான ஒன்று ஆகும். இந்தியர்கள் அதிகமாகத் தங்கத்தினைத் திருமணத்திற்காகத் தான் வாங்குகின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் திருமணத்திற்காக ஆபரணத் தங்கம், தங்கக் கட்டி, காயின் எனப் பல விதமாகத் தங்கத்தை இந்தியர்கள் வங்கி குவிக்கின்றனர்.

 

தென் இந்தியர்கள்

தென் இந்தியர்கள்

மொத்த இந்தியாவில் 40 சதவீத தங்கத்தினைத் தென் இந்தியர்கள் தான் வைத்துள்ளார்கள் என்று கூறலாம். மேற்கு பகுதியினைச் சேர்ந்த இந்திய மாநிலங்கள் 25 சதவீதமும், கிழக்கு மற்றும் வடக்கு இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீத தங்கத்தினைப் பயன்படுத்துகின்றனர்.

தங்கத்தை எங்கு வாங்குகின்றார்கள்?

தங்கத்தை எங்கு வாங்குகின்றார்கள்?

இந்தியர்கள் வங்கிகளில் என்ன தான் பல விதமான திட்டங்கள் மூலம் தங்க காயின், பத்திரம் என வழங்கினாலும் நகை கடைகளை நாடிச் சென்று தங்கம் வாங்குவதைத் தான் இந்தியர்கள் விரும்புகின்றார்கள்.

தங்கக் கடவுள்

தங்கக் கடவுள்

கேரளாவில் உள்ள பத்மநாபஸ்வாமி கோயில் தான் உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோயில் என்று கூறலாம். அதற்கு அடுத்த இடத்தில் திருப்பதி உள்ளது.

எப்படி?

எப்படி?

2011-ம் ஆண்டு வரை திருப்பதி தான் பணக்கார கோயில் என்ற இடத்தை இந்தியாவில் பிடித்து இருந்தது. ஆனால் 2011-ம் ஆண்டு ஒரு விசாரணைக்காகப் பத்மநாபஸ்வாமி கோயில் ரகசிய அரையினை ஆய்வு செய்த போது 100,000 வரலாற்று தாங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் மொத்த மதிப்பு 15 பில்லியனை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதலீடுகள்

முதலீடுகள்

இந்தியர்கள் ரியல் எஸ்டேட், பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை விடத் தங்கம் அல்லது நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் தான் முதலீடு செய்ய விரும்புகின்றார்கள் என்று தனலக்‌ஷ்மி வங்கியின் முன்னால் தலைவர் தீப்பக் சிங் தெரிவித்தார்.

 தங்க சட்டை

தங்க சட்டை

புனேவை சேர்ந்த தொழில் அதிபரான தத்தா ஃப்யூகே 12.7 மில்லியன் செலவில் 2013-ம் ஆண்டுத் தங்கத்தினால் ஆன சட்டை ஒன்றை அணிந்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அந்தச் சட்டை 14,000 தங்கத் துண்டுகள் பயன்படுத்தி 3.32 கிலோ இடையுடன் செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Indians have more interest on gold

Why Indians have more intrest on gold
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X