குறைந்த பட்ச ஓய்வூதிய தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த கோரிக்கை!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்குநாள் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பணியாளர்களின் சேமநல நிதி அமைப்பு (EPFO) ஓய்வூதியத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளது.

ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ1000 -ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொழிலாளர் அமைச்சகம் விரைவில் மத்திய அமைச்சரவையை அணுகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் தொழிலாளர் அமைச்சகம், EPFO (EMPLOYERS PROVIDENT FUND ORGANISATION) அமைப்புக்கு உட்பட்ட நிறுவனங்களை சார்ந்த தொழிலாளர்களுக்கு, அடிப்படை மாத சம்பளத்தை ரூ.15000 என உயர்த்த கோருகின்ற விண்ணப்பதையும் முன் வைக்கும் என்று தெரிகிறது.

குறைந்த பட்ச ஓய்வூதிய தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த கோரிக்கை!!

தொழில் துறை அமைச்சராக திரு. ஆஸ்கார் ஃபர்னாண்டஸ் பதவி ஏற்ற பின் நிலுவையிலுள்ள பல கோரிக்கைகள் விரைவான பரிசீலனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் மக்களவை தேர்தலுக்கு முன் தொழிலாளர்களுக்கான சில நல்வாழ்வு அளவீடுகளை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உயர் மட்ட குழு விரும்புகிறது.

குறைந்த பட்ச ஓய்வூதிய திட்டத்திற்கான வேண்டுகோள் விரைவில் அமைச்சரவையின் முன் வைக்கப் பட வேண்டும் என்று வளர்ச்சி குறித்த விபரமறிந்த அதிகாரி FE(FINANCIAL EXPRESS) -யிடம் தெரிவித்தார். EPFO தன் விதிகளுக்கு உட்பட்டு தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியத்தை ரூ15000 -ஆக உயர்த்தி அறிவிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போது ஊழியர்கள் தங்கள் பங்களிப்பாக தங்கள் அடிப்படை ஊதியத்தில் 8.93% -மும் அரசு தனது பங்களிப்பாக 1.16% -மும் செலுத்தி வருகின்றனர். அரசின் பங்களிப்பை 1.79%-ஆகவும் தற்போதுள்ள அடிப்படை ஊதியமான ரூ 6,500-லிருந்து ரூ15,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த இரு நடவடிக்கைகளும் EPS-ன் பற்றாக்குறையை குறைத்து ஓய்வூதியமாக ரூ1000 வழங்க வழி செய்யும்.

குறைந்த பட்ச ஓய்வூதிய தொகையாக ரூ.1000 வழங்கும் போது அரசுக்கு ரூ1,100 கோடி கூடுதல் சுமையை ஒவ்வொரு நிதியாண்டிற்கும் ஏற்படுத்தும் என்பதால்,தொழிலாளர் அமைச்சகம் இத்திட்டத்திற்கு எதிராகவே இருந்தது எனினும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உயர்மட்ட குழு இப்போது இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும்' நோக்கில் நிதித்துறை ஆரம்பத்தில் EPFO-யிடம் அதனுடைய சொந்த வருவாய் ஆதாரத்தைக் கொண்டு மாதம் ரூ.1000 வழங்கும் குறைந்த பட்ச ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறியிருந்தது. எப்படியும் இந்த திட்டத்தினால் 2018-2019 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் சுமார் ரூ.1,400 -லிருந்து ரூ.1,500 கோடி வரை அதிகமாகும்.

தேசிய சமூக உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் (முதியோர் ஓய்வூதியம் உட்பட) ஓய்வூதியமான ரூ7000 கோடி ஏற்படுத்தும் கூடுதல் சுமையை விட,குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கும்போது நிதியமைச்சகத்திற்கு ஏற்படும் கூடுதல் சுமை குறைவே ஆகும் என்று தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது.

குறைந்த பட்ச ஓய்வூதிய தொகை ரூ1000 ஆகவும் அடிப்படை ஊதியம் ரூ1500 ஆகவும் உயர்வு பெறும் என்று நம்புவோம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Minimum Rs 1,000 pension for EPFO subscribers in the works

The labour ministry will soon approach the Cabinet for a minimum pension of Rs 1,000 per month for the subscribers of the Employees Provident Fund Organisation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X