25,000 பேரின் வேலைக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

25,000 பேரின் வேலைக்கு 'ஆபத்து'.. அதிர்ச்சியில் இந்திய டெலிகாம் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த 3 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று டெலிகாம் துறை. இந்த வளர்ச்சியில் தானும் பங்குபெற வேண்டும் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் ஜியோ என்னும் பெயரில் டெலிகாம் சேவையை அறிமுகம் செய்தார்.

இது ஜியோ-விற்கு நன்மையாக இருந்தாலும் டெலிகாம் துறையில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்துள்ளது. எப்படி..?

ஜியோ அறிமுகம்

ஜியோ அறிமுகம்

ஜியோ-வின் அறிமுகத்திற்கு முன் இந்தியா டெலிகாம் சந்தை மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது. ஆனால் இந்நிறுவனத்தின் இலவச ஆஃபர்கள் மற்றும் குறைந்த கட்டணங்கள் குறித்த எதிரொலிகள் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்க முடியாது.

அதிர்வுகளின் எதிரொலி

அதிர்வுகளின் எதிரொலி

ஜியோவின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்த நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா, வோடபோன் என அனைத்தும் தங்களின் சேவைக் கட்டணத்தை அதிகளவில் குறைத்தது. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்களின் லாபத்தையும், வருவாயை இழந்து தவித்து வந்தனர்.

புதிய வழி..

புதிய வழி..

இந்நிலையில் நிறுவனங்கள் தங்களின் வர்த்தகம், வருவாய் மற்றும் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காகவும் தற்போது அறிவித்திருக்கும் குறைக்கப்பட்ட கட்டணத்திலேயே சிறப்பான சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காகப் புதிய வழியைக் கையாண்டு வருகிறது. இதன் மூலமாகவே டெலிகாம் துறையில் வேலைவாய்ப்பு இழப்பு எண்ணிக்கை அதிகரிக்து ஒட்டுமொத்த துறையே ஆடிப்போய் உள்ளது.

இணைப்பு

இணைப்பு

ஆம், ஜியோ அறிமுகத்திற்குப் பின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி) ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்றது, அதைத் தொடர்ந்து டெலிகாம் துறையில் டாப் 5 இடங்களில் இருக்கும் வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தற்போது இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வேலைவாய்ப்புப் பாதிப்பு

வேலைவாய்ப்புப் பாதிப்பு

இந்திய டெலிகாம் நிறுவனங்களின் தொடர் இணைப்பால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் மீதான பாதிப்பு அதிகரித்துள்ளது. இணைப்பால் எப்படி வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம்.

4 - 4.5 சதவீதம்

4 - 4.5 சதவீதம்

இந்திய டெலிகாம் துறையில் 1.3 லட்சம் கோடி என்ற மொத்த வருமானத்தில் 35000 கோடி ரூபாய் ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்கான செலவுகள் மூலம் மட்டுமே இழந்து வருகிறது டெலிகாம் நிறுவனங்கள்.

இதிலும் விற்பனை மற்றும் விநியோக பிரிவில் மட்டும் அதிகப்படியான வருவானத்தை ஊழியர்கள் வாயிலாக இழந்து வருகிறது. இந்நிலையில் டெலிகாம் நிறுவனங்களில் 22 சதவீத வருவாயும் இப்பிரிவில் இருந்து தான் வருகிறது.

 

செக் பாயின்ட்

செக் பாயின்ட்

இத்தகைய சூழ்நிலையில், 22 சதவீத வருவாய் அளிக்கும் இப்பிரிவில் இருந்து வருவாய் அளவுகளை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது டெலிகாம் நிறுவனங்கள். இதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது நிறுவன இணைப்புகள்.

பொதுவாக இரு நிறுவனங்கள் இணைக்கப்பட்டால், அதிகச் சம்பளம் பெறும் ஊழியர்கள், தேவையற்ற ஊழியர்கள், ஆட்டோமேஷன், எனப் பல காரணங்களுக்காக ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

இதே சூழ்நிலை தான் தற்போது டெலிகாம் துறையில் ஏற்பட்டுள்ளது.

 

25,000 வேலைவாய்ப்புகள்

25,000 வேலைவாய்ப்புகள்

டெலிகாம் துறையின் முன்னணி நிறுவனத்தின் மனித வள பிரிவின் உயர் அதிகாரி ஒரு கூறுகையில், நிறுவன இணைப்புகளால் டெலிகாம் துறையில் குறைந்தபட்சம் 10,000 முதல் 25,000 வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது.

இந்த எண்ணிக்கை அடுத்தச் சில வருடங்களில் 1 லட்சம் வரையில் கூட உயரலாம். மேலும் பல டெலிகாம் துறை சார்ந்த உயர் அதிகாரிகளும் வேலைவாய்ப்பு குறித்த ஆபத்தை உறுதி செய்துள்ளனர்.

 

3 லட்சம் வேலைவாய்ப்புகள்

3 லட்சம் வேலைவாய்ப்புகள்

இந்திய டெலிகாம் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சம் பேர் பணியில் உள்ள இந்நிலையில் நிறுவன இணைப்புகள் மூலம் அடுத்த 18 மாதத்தில் இத்துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படுவது கண் முன்னே தெரியும் என்று சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

ஏர்டெல் - 19,048
ஐடியா - 17,000
வோடபோன் - 13,000
ஏர்செல் - 8,000
ஆர்காம் - 7,500
டாடா டெலிகாம் - 5,500

இவை அனைத்தும் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telecom mergers could see 25,000 pink slips

Telecom mergers could see 25,000 pink slips
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X