7வது சம்பள கமிஷன்: விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுப்பனுவுகளை 27 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு!
டெல்லி: 2017 பட்ஜெட் இரண்டாவது கூட்டம் வியாழக்கிழமை இன்று துவங்கியுள்ள நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய அரசு ஊழியர்களுக்கான கொடுப்பனுவுகள் சதவீதத்தை உயர்த்துவார் என்று தமிழ் குட்ரிட்டர்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பட்ஜெட் கூட்டம் 2017 ஏப்ரல் 12 வரை நடக்க இருக்கும் நிலையில் கொடுப்பனுவுகள் உயர்வதற்கான அறிவிப்பு மத்திய அரசு மூன்றாவது கூட்டத்தில் வெளியிடும் என்றும் வருகின்ற நிதி ஆண்டு முதல் திருத்தப்பட்ட கொடுப்பனுவுகள் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் 7வது சம்பள கமிஷனில் இந்தக் கொடுப்பனுவுகள் எல்லாம் நிதித்துறை செயலாளர் அசோக் லவாசா தலைமையிலான குழு பரிந்துறைப்படி எடுக்கப்பட்டு வருகின்றது.
பிப்ரவரி 22-ம் தேதி தொழிற்சங்க அதிகாரிகள் லவாசா குழு உறுப்பினர்கள் இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
எச்ஆர்ஏ
ஊடகங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி தற்போது 24 சதவீதமாக உள்ள எச்ஆர்ஏ 30 சதவீதமாக 7வது சம்பள கமிஷன் உயர்த்த வாய்ப்புள்ளது. ஆனால் இப்போது எச்ஆர்ஏ 24, 16, 8 சதவீத அளவிடுகளாக உள்ளது.
கிரக்கப்பிடி
இப்போது 27 சதவீதம் கிரக்கப்பிடி உயரும் நிலையில் 50 சதவீதத்தைக் கிரக்கப்பிடி எட்டும் நிலையில் உள்ளது. மேலும் 27, 18, 9 சதவீதமாகக் கிரக்கப்பிடியும், 30, 20,10 சதவீதமாக நகரம், புற நகரம், கிராமங்கள் பொருத்து எச்ஆர்ஏவும் உயர்த்தப்படும் என்று கூறப்படுகின்றது.
196 கொடுப்பனுவுகள்
7 வது சம்பள கமிஷன் இப்போது உள்ள 196 கொடுப்பனுவுகளில் 53-ஐ நீக்கவும் சிலவற்றை இணைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
கொடுப்பனுவுகள் நீக்கம்
அது மட்டும் இல்லாமல் 52 கொடுப்பனுவுகளை நீக்கவும், 36 கொடுப்பனுவுகளை இணைக்கவும் முன்மொழிந்துள்ளது. 12 கொடுப்பனுவுகள் எந்த வித மாற்றமும் இல்லாமல் முன்பு இருந்ததைப் போலவே தொடரவும் 7 வது சம்பள கமிஷன் குழு முன்மொழிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications