ஆக்சிஸ் வங்கியின் லாபம் 16 சதவீதம் சரிவு.. சோகத்தில் முதலீட்டாளர்கள்..!
நாட்டின் 3வது பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியி ஜூன் காலாண்டின் முடிவில் லாப அளவுகளில் சுமார் 16 சதவீத அளவிலாந சரிவை சந்தித்துள்ளது.
லாபம்
சந்தை கணிப்புகளின் படி இவ்வங்கியின் லாபம் 7 சதவீதம் வரை உயரும் என கணித்த நிலையில் தற்போது 1,306 கோடி ரூபாய் அளவில் லாபத்தை பெற்றுள்ளது.
வட்டி வருமானம்
மேலும் இக்காலக்கட்டத்தில் ஆக்சிஸ் வங்கியின் மொத்த வட்டி வருமானம் கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் 2.2 சதவீதம் அதிகமாக 4,616.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
9.5 சதவீதம் அதிகம்
பிற வருமானத்தின் அளவு 9.5 சதவீதம் அதிகரித்து 2,999.81 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைதொடர்ந்து இயக்க லாபம் 4 சதவீதம் அதிகரித்து 4,291.16 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
வராக் கடன்
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் வராக் கடன் அளவு 10.6 சதவீதமாக உயர்ந்து 2,341.93 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications