சீனாவின் தோற்றுவிப்பான கொரோனா வைரஸ் தற்போது 74 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதன் மூலம் சுமார் 3,100 பேர் இறந்துள்ளனர். மேலும் 90,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
சொல்லப்போனால் சர்வதேச சுகாதார அமைப்பே இந்த கொரோனா தாக்கத்தினை அவசர நிலையாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த தொற்று நோயை உருவாக்கும் வைரஸூக்கு கோவிட் -19 என்ற பெயரையும் சூட்டியுள்ளது.

பயணங்களை ரத்து செய்ய நேரிடலாம்
மிக வேகமாக பரவி வரும் இந்த வைரஸானது உலகம் முழுவதும் மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள இடமான சீனா, தென் கொரியா, இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஆக பெரும்பாலான மக்கள் தாங்கள் திட்டமிட்டிருந்தபடி தங்களது சுற்றுலா பயணங்களை ரத்து செய்ய நேரிடலாம். ஏனெனில் பல பொது இடங்களில், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்குமாறும் பல நாடுகள் அறிவித்துள்ளன.

க்ளைம் செய்ய முடியுமா?
இதனால் பல விமான பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்திருந்த பதிவுகளை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் கட்டணங்களை இழப்பதிலும் அக்கறை செலுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸின் பயம் காரணமாக உங்களது பயணத்தை ரத்து செய்கிறீர்கள் என்றால் அது உங்கள் பயண காப்பீட்டில் அதை க்ளைம் செய்ய என்பது முடியுமா? என்பது இங்கு பலரின் கேள்வியாக உள்ளது.

டிராவல் இன்சூரன்ஸ்
நீங்கள் அதிக சர்வதேச பயணங்களையோ அல்லது தொடர்ச்சியான பயணங்களை அதிகளவில் மேற்கொள்வீர்கள் என்றால் நிச்சயம் இதை பற்றி அறிந்திருக்க முடியும். பொதுவாக பயணக் காப்பீட்டு கொள்கைகள், ரத்து செய்வதற்கான தனிப்பட்ட காரணங்களை உள்ளடக்குவதில்லை. ஆக கோவிட்-19 ஆல் நீங்கள் பாதிக்கப்படலாம் என்ற பயமும் உள்ளடங்கலாம்.

க்ளைம் செய்ய மறுக்கலாம்
காப்பீட்டு நிறுவனகள் பெரும்பாலான சந்தர்பங்களில் தொற்று நோய்கள் ஏற்படும் சந்தர்பங்களில் க்ளைம் செய்ய மறுக்கும். ஏனெனில் அந்த நேரத்தில் உங்களை போலவே அனைவரும் ஒரே நேரத்தில் க்ளைம் கேட்கலாம். இதனால் ஒட்டுமொத்த பேருக்கும் பாலிசி க்ளைம் செய்ய நேர்ந்தால், அந்த பாலிசி நிறுவனம் நஷ்டத்தினை காண நேரிடலாம். எப்படி இருப்பினும் சில விஷயங்களுக்காக இதில் க்ளைம் செய்து கொள்ள முடியும். அது நீங்கள் பாலிசி எடுத்திருக்கும் நிறுவனங்களை பொறுத்தது.

இப்படி இருந்தால் க்ளைம் செய்ய முடியும்
உதாரணத்திற்கு நீங்கள் ஏதேனும் ஒரு நாட்டிற்கு பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தால், அந்த வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கு முன்பு, அல்லது பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு நீங்கள் பயணம் செய்ய முடிவு செய்திருந்தால், அந்த சமயத்தில் உங்களது பாலிசியை க்ளைம் செய்ய முடியும். சில காப்பீட்டு நிறுவனங்கள் ஜனவரி 21க்கு முன்னர் சீனாவுக்கான அனைத்து பயணங்களையும் உள்ளடக்கும் என்று கூறியுள்ளதாக கூறப்படுக்கிறது.

எதற்கு க்ளைம் செய்ய முடியும்?
உங்களது அரசாங்கம் ஒரு இடத்திற்கு பயணிப்பதற்கு எதிராக ஆலோசனை வழங்கிய பின்னர் நீங்கள் பயணித்தால் உங்களால் காப்பீடு செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அவ்வாறு ஆலோசனைக்கு முன்பே நீங்கள் பதிவு செய்திருந்தால் நீங்கள் க்ளைம் செய்ய முடியும். இந்த க்ளைம் விகிதமானது நீங்கள் பயணம் செய்யும் தூரம், இலக்கு, முன்பதிவு நேரம் ஆகியவற்றை பொறுத்து க்ளைம் செய்ய முடியும்.

முன்பதிவுக்கு முன்னரே பாலிசி இருக்க வேண்டும்
நீங்கள் பயணத்திற்காக முன்பதிவு செய்யும் நேரத்தில், நீங்கள் பயண காப்பீடு செய்யவில்லை எனில், உங்கள் பாலிசியை முன்பதிவு செய்த பயணத்தின் மூலம் க்ளைம் செய்ய முடியாது. கொரோனா வைரஸ் இப்போது அறியப்பட்ட ஒரு பிரச்சனையாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதை க்ளைம் செய்ய முடியாது.

பயணம் செய்யும் நிறுவனம் மூலம் பயன் பெறலாம்
ஆனால் நீங்கள் பயணம் செய்யும் நிறுவனம் அல்லது விமான நிறுவனங்களின் தற்போதைய கொள்கைகளை நீங்கள் நம்பியிருக்க வேண்டும். அவர்களை தொடர்பு கொண்டும் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சிக்கில் கொண்டாலோ அல்லது போக்குவரத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வழங்கும் மருத்துவ பாதுகாப்பு காப்பீடு மூலம் நீங்கள் பயன் பெற முடியும்.