டெர்ம் இன்சூரன்ஸ் என்பது, பாலிசி முதிர்வுக் காலத்தில் பணம் திரும்பி வராது, ஆனால் இழப்பீடு என்பது அதிகமாக இருக்கும். ஐம்பது லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் இருபது ஆயிரத்துக்குள் தான் இருக்கும். இன்சூரன்ஸ் கம்பெனி, உங்கள் வயசு மற்றும் வருமானத்தைப் பொறுத்து இது கொஞ்சம் மாறும்.
அந்த வகையில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிறுவனம் இதை விட குறைந்த பிரிமியத்தில், அதிக கவரேஜ் உடன் வைத்துள்ள பாலிசி தான் ICICI Pru iProtect Smart பாலிசி.

டெர்ம் பாலிசியை பொறுத்த வரை அதிகப் பணம் செலுத்தி குறைவான இழப்பீடு பெறுவதை விட, குறைவான பணம் செலுத்தி அதிக இழப்பீடு பெறலாம் என்பது பலரின் எண்ணம்.
அந்த வகையில் ICICI Pru iProtect Smart பாலிசியில், 30 வயதான ஒருவர், இந்த பாலிசிக்காக தனது 45 வயது வரை பிரிமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பாலிசியை 70 வயது வரை கவராகும் என்றும் கூறப்படுகிறது. சில நேரங்களில் இந்த வயது இன்னும் கூட அதிகரிக்கப்படுகிறது. இது நிறுவனங்களை பொறுத்து மாறுபடுகிறது.
இந்த பாலிசிக்கான 50 லட்சம் வரை கவர் செய்து கொள்ள, வருட பிரிமியம் 7,088 ரூபாயாகும். இதுவே 1 கோடி வரை க்ளைம் செய்ய பிரிமியம் 12,970 ரூபாய் பிரிமியம் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரிமியம் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 2015லிருந்து இதுவரை ஆன்லைனில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட பாலிசி இது என்றும் கூறப்படுகிறது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், எதிர்பாராத விதமாக பாலிசி தாரர், விபத்திலோ அல்லது ஏதேனும் காரணமாக நிரந்தரமாக இயாலாத தன்மை ஏற்பட்டால், அனைத்து எதிர்கால பிரிமியத்தையும் தடை செய்வதோடு, அதோடு உங்களது பாலிசியையும் தொடர்ந்து கொள்ள முடியுமாம்.
மேலும் இந்த டெர்ம் பாலிசிக்கு 80சி வரி சலுகையும் உண்டு, மேலும் இந்த பாலிசியை தேர்வு செய்யும் போது மிக கிரிட்டிகல் ஆன நோய்களை நீங்கள் தேர்வு செய்யும் போது 80 டின் கீழும் வரிச்சலுகை உண்டாம். அதே போல நீங்களோ அல்லது உங்களது நாமினியோ க்ளைம் தொகையை பெறும் போது, அதற்காக 10 (10டி) சலுகையும் உண்டு என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக இந்த பிளான் இன்னும் பல சலுகைகளை அளிக்கிறது. அதிலும் மாத சம்பளம் வாங்கும் சம்பளதாரர்களுக்கு, நீங்கள் எதிர்பாராத க்ளைம் அல்லது இழப்பீடு தொகையை இந்த திட்டத்தின் மூலம் பெற முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. மேலும் இந்த பிளான் பற்றிய தகவல்களை அறிய இந்த நிறுவனத்தின் பிரதேயோக தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications