மும்பை : ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கும், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி, வாடிக்கையாளர்களுக்காக புதிய டெர்ம் பாலிசியான ஜீவன் அமர் பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஆயுள் காப்பீடு என்பதே ஒரு முதலீடாக கருதப்பட்டு வரும் நிலையில், எல்.ஐ.சி ஜூவன் அமர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் பாலிசி தாரர்கள் தங்களது விருப்பப்படி, இறப்பு நன்மை விருப்பங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் படி இரண்டு வழிகள் உள்ளன, அதில் தொகை உறுதி மற்றும் அதிகரிக்கும் தொகை உறுதி (Level Sum Assured and Increasing Sum Assured) என இரு திட்டங்கள் உள்ளன.

இந்த ஜீவன் அமர் திட்டம் ஆஃப்லைனில் மட்டுமே விற்கப்படும். இதை எல்.ஐ.சி முகவர்கள் மூலமாக மட்டுமே வாங்க முடியும் என்றும், இதே நேரம் எல்.ஐ.சி அமுல்யா ஜீவன் காலத்தை வாபஸ் பெற்றுள்ளது எல்.ஐ.சி கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய திட்டத்தில், பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி கூறியுள்ளது.
மேலும் இத்திட்டம், மற்ற காப்பீட்டுத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டமான பாலிசிதாரர்களுக்கு கூடுதல் பலன்களையும் அதிகப்படியான லாபத்தை அளிக்கக்கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.
lic jeevan amar planல் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும் என்றும், இதில் இரண்டு வகையில் மரணத்திற்கு பின்பு க்ளைம் தொகையை, வாரிசுதாரர் பெற்றுக் கொள்ளலாம்.
பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் இறக்கும்பட்சத்தில், வாரிதாரர் பணத்தை மொத்தமாகவோ 5, 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு தவணைகளாகப் பிரித்தும் வாங்கிக் கொள்ளலாம் அல்லது மொத்தமாகவும் வாங்கி கொள்ளலாம்
இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசி காலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாகவும் செலுத்தலாம். இல்லையெனில் ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம் என்றும் எல்.ஐ.சி கூறியுள்ளது.
இப்பாலிசியை எடுக்க 18 வயது முதல் 65 வயது வரை உடையவர்கள் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பாலிசிதாரரின் 80 வயது வரை இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும் எல்.ஐ.சி கூறியுள்ளது.
இப்பாலிசியில் Accidental Rider, புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மற்ற எல்லா பாலிசிகளையும் போல பெண்களுக்கான ப்ரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு. குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாயாகும். அதிகபட்சம் லிமிட் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications