மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : இன்ஷூரன்ஸ் என்றாலே நம்மவர்கள் நமக்கு இல்லாவிட்டாலும், நம்மை அடுத்து நமது குடும்பத்தினருக்காவது பயன்படும் என்ற நோக்கிலேயே பலர் இன்ஷூரன்ஸ் செய்கிறார்கள். இந்த வகையில் இன்ஷூரன்ஸ்கள் அதிகளவில் தனியார் நிறுவனங்கள் மூலமே போடப்படுகின்றன.

 

அப்படி இன்ஷூரன்ஸ்களுக்காக கட்டப்பட்ட இன்ஷூரன்ஸ் பிரிமீயம் எவ்வளவு தெரியுமா? அதுவும் தனியார் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் பிரீமியம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஆமாங்க.. கடந்த இரண்டு ஆண்டுகளில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே மற்றும் அதன் பயணிகளிடமிருந்து சுமார் 46 கோடி ரூபாய் பிரிமீயம் செலுத்தப்பட்டுள்ளதாம்.

ரயில்வே இன்ஷூரன்ஸ்காக ஒப்பந்தம்!

ரயில்வே இன்ஷூரன்ஸ்காக ஒப்பந்தம்!

இதே நேரத்தில் National transporter's travel insurance scheme மூலம் வெறும் ஏழு கோடி ரூபாய் மட்டுமே க்ளைம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ளது. ஆமாங்க.. 46 கோடி ரூபாய் பிரீமியத்தில் வெறும் 7 கோடி ரூபாய் மட்டும் தான் க்ளைம் செய்யப்பட்டுள்ளதாம். ரயில்வே அமைச்சகத்தின் முழு உரிமையாளரான ஐ.ஆர்.சி.டி.சி மூன்று தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வரையறுக்கப்பட்ட டெண்டர் மூலம் இதற்காக ஒப்பந்தமும் செய்துள்ளதாம்.

இந்த மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?

இந்த மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தமா?

குறிப்பாக ஸ்ரீ ராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்டு ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பயண காப்பீட்டு திட்டம், கடந்த 2016 செப்டம்பரில் ஒரு பயணிக்கு 0.92 ரூபாயாக தொடங்கப்பட்டதாம். இந்திய ரயில்வே கேட்டரிங் & சுற்றுலா கார்ப்பரேஷனின் (Indian Railway Catering & Tourism Corporation (IRCTC)) அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மின் டிக்கெட் முன்பதிவு செய்த உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளுக்கு இந்த வசதி உள்ளதாம்.

பாதிகப்பட்டவருக்கோ அல்லது வாரிசுக்கோ உதவி!
 

பாதிகப்பட்டவருக்கோ அல்லது வாரிசுக்கோ உதவி!

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், பாதிக்கப்பட்டவருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்கோ(சட்டபூர்வ வாரிசுக்கு ஒரு தொகை) இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறதாம். ஏனெனில் ரயில் விபத்து, விரும்பத்தகாத சம்பவங்கள் காரணமாக, முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளின் மரணம் அல்லது காயம் ஏற்பட்டால் க்ளைம் செய்து கொள்ளலாமாம்.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் காருக்கு கிடைத்த தகவலின்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஐ.ஆர்.சி.டி.சி காப்பீட்டு நிறுவனங்களுக்கு 38.89 கோடி ரூபாய் பிரிமியம் செலுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் வெறும் 7.29 கோடி ரூபாய் மட்டுமே க்ளைம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எவ்வளவு தொகை?

எவ்வளவு தொகை?

எந்தவொரு ரயில் விபத்து அல்லது பிற அசம்பாவித சம்பவங்களால் எழும் இறப்பு மற்றும் நிரந்தர மொத்த இயலாமைக்கு பயணக் காப்பீடு 10 ரூபாயாகவும், இதே நிரந்தர ஊனமுற்றோருக்கு 7.5 லட்சம் ரூபாயாகவும், காயத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கும் செலவினங்களுகாக 2 லட்சம் ரூபாயாகவும் காப்பீடு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இரயில்வே விபத்துகள் வெகுவாக குறைந்துவிட்டன?

இரயில்வே விபத்துகள் வெகுவாக குறைந்துவிட்டன?

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் காப்பீட்டு 206 க்ளைம்கள் செய்யப்பட்டுள்ளன. இதே 72 க்ளைம்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகள் வெகுவாக குறைந்து விட்டதால் க்ளைம்களின் எண்ணிக்கை குறைவிட்டாதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக ரயில் விபத்துகள் கடந்த 2013 - 2014ல் 118 ஆக இருந்த இரயில்வே விபத்துகள், கடந்த 2016 - 17ல் 104 ஆகவும், 2017 - 2018ல் 59 ஆகவும் குறைந்துள்ளது.

இரயில்வே பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பு?

இரயில்வே பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிப்பு?

கடந்த 2016 - 2017ம் ஆண்டுடோடு ஒப்பிடும்போது 2017 - 2018 ஆம் ஆண்டில் கொண்டு செல்லப்பட்ட பயணிகள் எண்ணிக்கை 2.09 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாம். இதுவே 2017 - 2018வுடன் ஒப்பிடும் போது, 2018 - 2019ல் பயணிகளின் எண்ணிக்கை 0.64 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Pvt insurance firms got Rs.46 crore premium, but its paid Rs.7 cr in claims to railway passengers

Pvt insurance firms got Rs.46crore premium, but its paid Rs.7cr in claims to railway passengers
Story first published: Sunday, July 21, 2019, 18:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X