
இன்சூரன்ஸ் கணக்கீடு எப்படி?
வாழ்நாள் பாலிசி எடுத்துக் கொண்டவர் நீங்கள் எனில் "Mortality Charge" என்பது உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். பெருமளவு ஒரு பிரிமீயத்தை நீங்கள் செலுத்தும் போது இந்த Mortality Charge என்பது கணக்கிடப்பட்டு அது தனியே வைக்கப்படும். இந்தத் தொகையானது பாலிசிதாரர் காப்பீட்டு காலத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால் Mortality Charge என்பதுதான் உண்மையான பாலிசி கட்டணமாகும். பிரிமீயம் கட்டணம் என்பது பாலிசிதாரரின் வயது. பாலிசி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
Mortality Charge என்பது பல்வேறு கட்டணங்களுடன் சேர்த்து வரவு வைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் செலுத்துகிற பிரிமீயத் தொகை முழுவதுமே முதலீடாக இருக்காது. ஏஜெண்ட் கமிஷன், நிர்வாக கட்டணங்கள் மற்றும் Mortality Charge ஆகியவும் கழிக்கப்படும்.
Mortality Charge என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானதாக இருக்காது. உதாரணமாக பார்த்தோம் என்றால் இளைஞர் ஒருவர் குறைவான கட்டணத்தை செலுத்த நேரிடும். அதே நேரத்தில் முதியவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களின் வயதைக் கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல்தான் பெண்களுக்கும் குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதேபோல் நீங்கள் என்ன மாதிரியான பணி செய்கிறீர்கள் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாலிசிதாரர் ஒரு ஸ்டண்ட் மேன் என்றால் அவரிடம் "Mortality Charge" கூடுதலாக வசூலிக்கப்படும்.
எல்.ஐ.சி என்பது நாட்டில் நீண்டகாலமாக செயல்பட்டு வரும் காப்பீட்டு நிறுவனம். வாழ்நாளைப் பொறுத்தே Mortality Charge கணக்கிடப்படுகிறது. அனேகமாக அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுமே எல்.ஐ.சி.யின் கணக்கீட்டைத்தான் பின்பற்றுகின்றன. அதனால் பிரிமீயம் செலுத்துவோர் பொதுவான கட்டண மாற்றங்களை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
ஆயுள் காப்பீடு என்பது உங்களையும் உங்களது குடும்பத்தையும் காப்பாற்றக் கூடிய ஒன்று. இந்த Mortality Chargeதான் உண்மயான இன்சூரன்ஸ் விலை. இதுவே உங்களுக்குப் பாதுகாப்பானதும்கூட என்பதை அவசியம் புரிந்து கொள்ள வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications