
ஏடிஎம் கார்டு பின் நம்பர், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டுகளை மறந்துவிடக் கூடாது என்று நினைத்து சிலர் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள், அலுவலகத்தில் உள்ள நோட்பேட், வீட்டில் உள்ள டைரி, காலண்டர் என்று பல்வேறு இடங்களில் எழுதி வைக்கிறார்கள். அதுவும் வங்கிக் கணக்கு எண், ஆன்லைன் பாங்கிங் பாஸ்வேர்டு, ஏடிஎம் பின் நம்பர் என்று அனைத்தையும் தெள்ளத் தெளிவாக எழுதி வைக்கிறார்கள். இப்படி பிறர் கண்ணில் படும் இடத்தில் இது போன்ற முக்கியமானவற்றை எழுதி வைப்பது மிகவும் தவறு.
அலுவலக கம்ப்யூட்டரில் இப்படி முக்கியமான விவரங்களை வைப்பது என்னிடம் உள்ள பணத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொடுப்பது போன்று உள்ளது.
வீட்டில் ஒரு டைரியில் எழுதி அதை பீரோவில் பூட்டி வைத்துக் கொள்ளலாம். அதைவிட்டு விட்டு ஆங்காங்கே எழுதி வைத்தால் அதை யார் பார்க்கிறார்களோ அவர்களுக்கு அடித்தது ஜாக்பாட். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பணத்தை இழந்த பிறகு பாடம் கற்பதைவிட முன்பே உஷாராக இருப்பது நல்லதல்லவா?


Click it and Unblock the Notifications