முதலீடு செய்யப் போறீங்களா? முதல்ல இதைப் படிங்க

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு செய்யப் போறீங்களா? முதல்ல இதைப் படிங்க
பெங்களூர்: முதலீடு முன்னேற்றம் தரும் ஆனால், முதலீடு சரியாக இருந்தால்தான் நிம்மதியான வாழ்க்கையையும் தரும். அப்படி சரியான முதலீடு செய்ய விதிமுறைகள் இருக்கிறதா? ஆம், இருக்கிறது. எந்த வகையான முதலீடாகட்டும்... நிலம், நகை, வர்த்தகச் சந்தை, வட்டிக்கு விடுதல் என எதுவாக இருந்தாலும் பின் வரும் விதிகளைக் கடைப்பிடித்தால் நன்மை விளையும்.

1. குறிக்கோள் இல்லாமல் முதலீடு செய்வது கடலில் விழுந்த கடுகு போல காணாமல் போய்விடும், அதனால் குறிக்கோள் முக்கியம்.

2. ரோஜா என்றாலே முள் இருக்கும், அதே போல் எல்லா முதலீட்டிலும் ரிஸ்க் இருக்கும், ஞாபகம் இருக்கட்டும்.

3. முட்டாள் தனமாக ஒரே வகையான முதலீட்டில் மொத்த பணத்தையும் போடாமல் பல வகையான முதலீட்டில் பிரித்து வைத்தால் ஒன்றில் இழந்தாலும் மற்றொன்றில் பிடித்து விடலாம்.

4. உங்களது ரிஸ்க் திறனைப் பொறுத்து பணத்தை முதலீடு செய்யுங்கள்.

5. உங்களுக்குப் புரியாத ஒன்றில் முதலீடு செய்வது ஆபத்தானது.

6. முதலீடு செய்யும் முன் அதை அறிந்து செய்வது நல்லது.

7. முதலீடு செய்யும் போது அதில் உள்ள நுட்பங்களையும் தெரிந்து யோசித்து முதலீடு செய்வது நன்று.

8. எதை மறந்தாலும் வரியை மறக்காதீர்கள். முதலீடு தொகைக்கும் வரி நீங்கள் தான் செலுத்த வேண்டும்.

9. ஆட்டு மந்தைப் போல் இல்லாமல், யோசித்து முதலீடு செய்வது ஆவசியம்.

10. உங்களால் சமாளிக்க முடியும் அளவிற்கு முதலீடு செய்வது பிழை ஏற்பட்டாலும் நீங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்க உதவும்.

இப்போ முதலீடு செய்யுங்கள்... வெற்றி நிச்சயம்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 commandments for safe investing | முதலீடு செய்யப் போறீங்களா? முதல்ல இதைப் படிங்க

Investing can be easy if you keep a few things in mind and have proper knowledge in the field. Whether it's real estate, equities, mutual funds or debt, one needs to adopt a patient and knowledgeable approach. Above are a few pointers which might help you in that direction.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X