
(5 reasons why interest rates on loans won't fall)
1. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த காலாண்டு ஜிடிபி வளர்ச்சி:
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி வெறும் 4.5 சதவீதம் மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்த வளர்ச்சி இதுவாகும். குறிப்பாக விவசாயம், சுரங்கம் மற்றும் உற்பத்தி துறைகளில் ஏற்பட்டிருக்கும் பெரிய தொய்வு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்திருக்கிறது. இந்த நிலையில் வட்டி விகிதத்தை குறைத்தால் முதலீடு அதிகரிக்கும். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
2. 4 சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தி பொருட்களின் வளர்ச்சி:
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குக் முக்கிய காரணம் கடந்த பிப்ரவரியில் ஏற்பட்ட உணவு பொருட்களைச் சாராத பொருட்களின் உற்பத்தி குறைவாகும். இந்த உற்பத்தி குறைவை மிக முக்கிய பின்னடைவாக ரிசர்வ் வங்கி கருதுகிறது. மேலும் இந்த உற்பத்திக் குறைவு கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் பொருட்களின் விலையும் சராசரியான இடைவெளியில் உயர்ந்து கொண்டு இருக்கிறது.
3. கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்:
வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்து வருவதால் அதன் விலை அதிகரிக்கும் போது இந்திய பண வீக்கமும் அதிகரிக்கிறது. மேலும் அதிகரிக்கப்பட்ட பெட்ரோல் விலை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்தப்படுகிறது. அதோடு டீசல் விலையும் நிரந்தரமில்லாமல் எப்போது அதிகரிக்குமோ என்ற நிலையில் இருக்கிறது.
4. அரசு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வந்திருக்கும் அழுத்தம்:
கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசு மற்றும் தொழிற்சாலைகள் ரிசர்வ் வங்கியை தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தன. மேற்கண்ட காரணங்களால் ரிசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications