சென்னை: அன்னிய நாட்டு பணத்தை பெரிதளவில் இந்தியாவில் பெறுவதற்காக என்ஆர்இ வைப்புத் தொகைக்கு(பிக்சட் டெபாசிட்) வழங்கும் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. மேலும் என்ஆர்ஒ வைப்புத் தொகையில் கிடைக்கும் வட்டியைப் போல் அல்லாமல், என்ஆர்இ வைப்புத் தொகையில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.
முக்கியமான 5 தனியார் வங்கிகள் என்ஆர்இ வைப்புத் தொகைக்கு அதிக வட்டி வழங்குகின்றன. எந்தெந்த வங்கிகள் என்ஆர்இ வைப்புத் தொகைக்கு அதிக வட்டியைத் தருகின்றன என்று பார்ப்போம். ஆனால் இங்கு கோஆபரேட்டிவ் வங்கிகளைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை.
கத்தோலிக்க சிரியன் வங்கி
கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க சிரியன் வங்கி, 12 முதல் 24 மாத கால என்ஆர்இ வைப்புத் தொகைக்கு 9.65 சதவீத வட்டியை வழங்குகின்றது. இந்த வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.
சௌத் இந்தியன் வங்கி
இந்த வங்கி 15 மாத கால என்ஆர்இ வைப்புத் தொகைக்கு 9.60 சதவீத வட்டியை வழங்குகின்றது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
1 முதல் 2 ஆண்டு கால என்ஆர்இ வைப்புத் தொகைக்கு 9.50 சதவீத வட்டியை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வழங்குகிறது. இது தவிர 3 முதல் 10 ஆண்டு காலம் வைப்புத் தொகைக்கு 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மட்டுமே 500 நாட்கள் என்ஆர்இ வைப்புத் தொகைக்கு 9.25 சதவீதம் வரை வட்டியை வழங்குகின்றது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
இந்த வங்கி 7 ஆண்டு 7 மாத கால என்ஆர்இ வைப்புத் தொகைக்கு 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. இது நீண்ட காலமாக இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாக இருப்பதால், இதில் நம்பி பணத்தை முதலீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications