சென்னை: 2103-2014ம் ஆண்டுக்கான வரியைச் செலுத்த மற்றும் வரி செலுத்துவதில் விடுபட்டு, வரியை சேமிக்க இன்னும் 9 நாட்களே உள்ளன. இந்த நிலையில் வரியை சேமிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவு வழி வகுக்கிறது. வரியை சேமிக்க விரும்பினால் வங்கிகள் வழங்கும் வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
இவ்வாறு வருமான வரி சேமிப்பு வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு எந்தெந்த வங்கிகள் எல்லாம் அதிக வட்டியை வழங்குகின்றன என்று பார்ப்போம்.
பாரத் கோஆப்பரேட்டிவ் வங்கி
இந்த வங்கி தனது பாரத் டெபாசிட் டாக்ஸ் பெனிபிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 10 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில் சேர்ந்தால் வரி செலுத்துவதில் இருந்து விடுபட்டு வரியை சேமிக்க முடியும். இந்த திட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற வருமான வரி சட்டம் பிரிவு 80சி அனுமதி அளித்திருக்கிறது.
அப்யுதயா கோஆப்பரேட்டிவ் வங்கி
இந்த வங்கி வழங்கும் வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடு தொகைக்கு 9.75 சதவீத வட்டியை வழங்குகிறது. முதியவர்களுக்கும் இதே வட்டியை வழங்குகிறது.
சிட்டி யூனியன் வங்கி
தமிழ்நாட்டைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கி, வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.50 சதவீத வட்டியை வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு நமது சேமிப்பை இந்த திட்டத்தின் கீழ் அதிக வட்டியுடன் பாதுகாத்து வைக்க முடியும்.
டெவலப்மென்ட் கிரடிட் வங்கி
மும்பையைச் சேர்ந்த இந்த வங்கி வரியைச் சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.30 சதவீத வட்டியை வழங்குகிறது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்
இந்த வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அவர்களின் தேவைக்கேற்ப மாத வட்டி, காலாண்டு வட்டி, அரையாண்டு வட்டி, ஆண்டு வட்டி என்று பல்வேறு வகையில் வட்டியை வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர்
இந்த வங்கி வழங்கும் டாக்ஸ் சேவர் டெப்பாசிட் திட்டத்தில் இணைபவர்களுக்கு 9.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த வங்கி மட்டுமே வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்திற்கு அதிக வட்டியை வழங்குகிறது.
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
இந்த வங்கியும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியாகும். வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் இணைபவர்களுக்கு இந்த வங்கி 9.05 வட்டியை வழங்குகிறது.
மேற்கூறிய வங்கிகளின் வரியை சேமிக்கும் வைப்புத் தொகை திட்டத்தில் முதலீடு செய்தால் பணமும் பத்திரமாக இருக்கும்,வட்டியும் அதிகமாகக் கிடைக்கும். அதே நேரத்தில் வரி செலுத்துவதிலிருந்து விடுபடவும் முடியும்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications