
வீட்டுக் கடனை மாற்றுவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. தற்போது இருக்கும் வீட்டுக் கடனில் நீங்கள் பெற்றுவரும் அனுகூலங்கள்
2. தற்போதைய வங்கியில் வேறு கடனுக்கு மாறுதல்
3. வேறு புதிய நிறுவனத்தில் கடன் வாங்கி இருக்கும் கடனை அடைத்தல்
4. இருக்கும் கடனை மாற்றும் போது கட்டணம் செலுத்த வேண்டுமா என்று பார்த்தல்
புதிய வங்கி அல்லது தனியார் நிறுவனத்தில் மாற்றுவதற்கு முன் சரிபார்க்க வேண்டியவை
1. வீட்டுக் கடனை மாற்றப் போகும் வேறு வங்கியின் கடனுக்காக ஆகும் முன் கட்டண விவரங்களை சரிபார்த்தல்
2. புதிய கடனுக்கு ஆகும் ப்ராசஸிங் செலவை சரிபார்த்தல்
3. வாங்கப் போகும் புதிய கடனில் இருக்கும் வட்டியையும், தற்போது இருக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தல்
வட்டி விகிதத்தை அடிப்படையாக வைத்து மட்டும் கடனை மாற்றலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாது. மாறாக ப்ராசஸிங் கட்டணம் மற்றும் ஃப்ரீ பேமெண்ட் கட்டணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து மொத்தமாக பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
வீட்டுக் கடனுக்கு தற்போது இருக்கும் திருப்பிச் செலுத்தும் முறையையும், அதுபோல் புதிய கடன் வாங்கினால் அதை திருப்பிச் செலுத்தும் முறை, அதன் வட்டி மற்றும் இதர கட்டணங்கள் போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வட்டி விகிதத்தை மட்டும் பார்க்கக் கூடாது.
பெரும்பாலும் வீட்டுக் கடன்கள் பலருக்கு சுமையாக இருக்கின்றன. ஒரு வேளை வட்டி விகிதம் குறைவாக இருந்தால் மட்டுமே வேறு வங்கிகளை அணுக வேண்டும். மேலும் பல வங்கிகள் கடன் வழங்க நீண்ட காலத்தை எடுத்துக் கொள்வது வாடிக்கையாளர்களை எரிச்சல் அடையச் செய்யும்.


Click it and Unblock the Notifications