
(4 top equity mutual fund picks)
வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளை வாங்க விண்ணப்பிப்பதற்கு முன் பின்வரும் தகவல்களைத் தெரிந்து கொள்வது நல்லது.
கிரெடிட் கார்டுகளுக்காக பலவித கட்டணங்கள் மற்றும் பலவிதமான வட்டி விகிதங்களை வங்கிகள் நிர்ணயித்திருக்கின்றன. எனவே கிரெடிட் கார்டை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் வங்கி வழங்கும் கிரெடிட் கார்டுக்கான அனைத்து கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
இரண்டாவதாக வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுக்கான சட்ட திட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றை முழுமையாக வாசித்த பின்பு விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டும்.
மற்ற கடன்களுக்கு வழங்கும் வட்டியைவிட வங்கிகள் வழங்கும் கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி சற்று அதிகமாகவே இருக்கும். எனவே ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் கிரெடிட் கார்டுகளுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தை வங்கி நிர்ணயித்திருக்கிறது மற்றும் வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது மேலும் அதை எவ்வளவு காலத்திற்கு நிர்ணயித்திருக்கிறது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாங்கும் கிரெடிட் கார்டுக்கு இன்சூரன்ஸ் கவர் இருக்கிறதா என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இன்சூரன்ஸ் கவர் கொடுக்கப்பட்டால் அது இலவசமாக வழங்கப்படுகிறதா அல்லது கட்டணத்துடன் வழங்கப்படுகிறதா என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டியவை:
கிரெடிட் கார்டுகளை வாங்குபவர்கள் மீது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக வங்கிகள் வேறு கட்டணங்களைச் சுமத்தக் கூடாது. அவ்வாறு கட்டணத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதை ஒரு மாதத்திற்கு முன்பே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் தெரியப்படுத்த வேண்டும்.
கிரெடிட் கார்டுகளுக்கான வட்டியை நிர்ணயம் செய்ய வங்கிகளுக்கு முழு உரிமை உண்டு.
அதே நேரத்தில் கிரெடிட் கார்டுகளுக்கான ஆண்டு வட்டியை எவ்வாறு நிர்ணயம் செய்கிறன்றனர் என்பதை கிரெடிட் கார்டுகளை வாங்குவோருக்கு முன்கூட்டியே விளக்க வேண்டும். எடுத்துக்காட்டாக கிரெடிட் கார்டுக்கு ஒரு மாத வட்டி 2.95 சதவீதம் விதிக்கப்பட்டால், அதன் ஆண்டு வட்டி 35.04 சதவீதமாக மாறும். இதை கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக வங்கிகள் தெரியப்படுத்த வேண்டும்.
தற்போது கிரெடிட் கார்டுகளுக்கான சேவைக் கட்டணம் 12.24 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கிரெடிட் கார்டு வழங்கும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இஎம்ஐ வசதி இருந்தால் அதற்கும் ஒரு சில கட்டணங்கள் வாடிக்கையாளர் மீது சுமத்தப்படும். அதையும் கிரெடிட் கார்டு வாங்கும் வாடிக்கையாளர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
ஒருவேளை கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனைவிட செலுத்த வேண்டிய தொகை அதிகரித்துவிட்டால், அதிகரித்த தொகைக்கும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒருசில நேரங்களில், கிரெடிட் கார்டுகளுக்கு தவறான கட்டணம் வசூலிக்கப்பட்டால், வங்கிகளை அணுகி அதற்கான காரணங்களைக் கேட்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் வங்கி 60 நாட்களுக்குள் அந்த வாடிக்கையாளருக்கு பதில் அளிக்க வேண்டும்.
மேற்கூறிய தகவல்களை நீங்கள் நன்றாக தெரிந்து வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications