சென்னை: எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும் அதில் முதலீடு செய்வது என்பது ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. அதாவது வியாபாரத்தில் கடுமையான ரிஸ்க் எடுத்தால் நிறைய லாபம் உண்டு. அதுபோல வைப்புத் தொகையில்(பிக்ஸட் டெப்பாசிட்) முதலீடு செய்தால் அதில் ஏராளமான ரிஸ்குகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் அதிகமான லாபமும் உள்ளன. வைப்புத் தொகையில் அதிக வட்டியைத் தரும் ஒரு சில தனியார் நிறுவனங்களை பார்ப்போம்.
ஜெய்பிராகஷ் அசோசியேட்ஸ்:
இந்த நிறுவனத்தில் வைப்புத் தொகையில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 12 சதவீத வட்டி கிடைக்கும். 36 மாதங்களில் அதாவது மூன்று ஆண்டுகளில் முதலீட்டுக்கு 12.63 சதவீத வட்டியை வழங்குகின்றனர். இந்த வட்டி விகிதம் மற்ற வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைவிட 3 சதவீதம் அதிகம் ஆகும்.
சூர்யா ரோஷினி:
இந்த நிறுவனமும் 3 வருட வைப்புத் தொகைக்கு 12 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த நிறுவனம் நீண்ட காலமாக இயங்கி வருவதால் இதிலிருந்து வரும் வருமானம் நிலையாக இருக்கும். 3 வருட முடிவில் நல்ல வட்டி விகிதத்தைப் பெறலாம்.
திவான் ஹவுசிங்:
இந்த நிறுவனம் 3 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு 10.50 சதவீத வட்டியை வழங்குகிறது. சூர்யா ரோஷினி மற்றும் ஜெய்பிரகாஷ் போன்ற நிறுவனங்களைவிட இது குறைந்த வட்டியை வழங்கினாலும், மற்ற வங்கிகளைவிட அதிகமான வட்டியை வழங்குகிறது. மேலும் இந்த நிறுவனம் நீண்ட காலமாக இயங்கி வருவதால் முதலீட்டிற்கு உத்திரவாதம் உண்டு.
ப்ளெதிகோ பார்மசுட்டிகல்ஸ்
இந்த நிறுவனம் 3 ஆண்டு கால வைப்புத் தொகைக்கு வருடத்திற்கு 12 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமகன்களுக்கு 12.50 சதவீத வட்டியை வழங்குகிறது. மருத்துவத் துறையில் இருக்கும் இந்த நிறுவனம் ஏற்றுமதித் துறையிலும் ஈடுபட்டு வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications