
வெளிநாட்டு இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்ச வரம்புகள்:
வெளிநாட்டு இந்தியர் ஒருவர் ஒரு இந்திய நிறுவனத்தில் செய்யும் முதலீடானது, அந்த நிறுவனத்தின் மொத்த முதலீட்டின் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு வேளை இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றினால் அவர் 24 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்யலாம்.
வெளிநாட்டு இந்தியர்கள் டெலிவரி பேஸ்டு மெத்தட் அடிப்படையில் பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். ஆனால் இன்ட்ரா-டே அடிப்படையில் அவர்கள் பங்குகளை வாங்க முடியாது அல்லது விற்க முடியாது.
வெளிநாட்டு இந்தியர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு புவியியல் அமைப்பு ஒரு பெரிய தடையாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் பகலாக இருக்கும் போது அவர்கள் இருக்கும் பகுதிகள் இரவாக இருக்கும். எனவே இந்தியாவில் பகல் நேரத்தில் நடைபெறும் பங்குச் சந்தை நிலைவரத்தை அவர்கள் உண்ணிப்பாகக் கவனிக்க முடியாது. எனவே அவர்கள் அதற்காக ஒரு வழக்குரைஞரை வைத்துக் கொள்ளலாம்.
வரி விகிதம்:
பங்குச் சந்தையில் ஈடுபடுகின்ற இந்தியாவில் வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே விதமான வரியே விதிக்கப்படுகின்றன. ஆனால் வெளிநாட்டு இந்தியர் ஒருவர் தான் வாங்கிய பங்கில் லாபம் கிடைத்தால் அதற்கான வரி கழிக்கப்பட்டே கொடுக்கப்படும்.
எனவே இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் வெளிநாட்டு இந்தியர்கள் பலமுறை யோசித்து பார்ப்பது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications