சென்னை: நீங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய வரியை சேமிக்க 80 சி மற்றும் 80டி போன்ற வழக்கமான வரி சேமிக்கும் திட்டங்களுக்கு மாற்றாக வேறு வரி சேமிக்கும் திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? தற்போது ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (ஆர்ஜிஇஎஸ்எஸ்) என்று ஒரு புதிய வரி சேமிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் குறைவான வருமான ஈட்டுபவர்கள், இந்த ஆர்ஜிஇஎஸ்எஸ் வரி சேமிக்கும் திட்டத்தில் சேர்ந்து ரூ.50,000 வரை முதலீடு செய்தால் அவர்கள் ரூ.25,000 வரை தங்கள் வரியை சேமிக்க முடியும்.
இந்த புதிய திட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது?
1. முதலில் ஒரு ஏஜெண்ட் மூலமாக என்டிஎஸ்எல் அல்லது சிடிஎஸ்எல் ஆகியவற்றில் ஒரு டிமேட் கணக்கை தொடங்க வேண்டும்.
2. அவ்வாறு தொடங்கிய கணக்கிற்கு ஆர்ஜிஇஎஸ்எஸ் கணக்கு என்று பெயரிட வேண்டும். ஒரு வேளை நீங்கள் டிமேட் கணக்கு வைத்திருந்து அதில் வர்த்தகம் எதுவும் இல்லாமலிருந்தால் அதற்கும் ஆர்ஜிஇஎஸ்எஸ் என்று பெயரிட வேண்டும். அதற்காக எ படிவத்தைப் பயன்படுத்தலாம்.
3. கணக்கைத் தொடங்கிய பின்பு வருடம் முழுவதும் தகுதியான பங்குகளை மட்டுமே வாங்க ஆரம்பிக்கலாம். மற்ற வகையான பங்குகளை வாங்க முடியாது.
இப்போது நீங்கள் பிரிவு 80 சிசிஜியின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.
ஆர்ஜிஇஎஸ்எஸ் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுகள் முதல் வருடம் கண்டிப்பாக லாக் இன் செய்யப்படும். ஆனால் 2 மற்றும் 3வது ஆண்டுகளில் அதுபோன்ற விதிமுறை கிடையாது.
Share This Article
English summary
How to invest in Rajiv Gandhi Equity Savings Scheme? | ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேவிங்ஸ் ஸ்கீமில் முதலீடு செய்வது எப்படி?
If your income is less than Rs 10 lakhs and you are looking for another tax saving instrument beyond the usual 80C and 80D instruments, then it has to be the newly introduced Rajiv Gandhi Equity Savings Scheme (RGESS). This is of course if you are a new investor into equities. This RGESS scheme would give tax benefits to new investors who invest up to Rs 50,000 and whose annual income is below Rs. 10 lakh. Deduction available is Rs 25000 for investing upto Rs 50,000.
Story first published: Thursday, March 28, 2013, 16:50 [IST]
Other articles published on
Mar 28, 2013