
சொத்தின் மீது எப்போது கடன் வாங்கலாம்?
பலர் பல காரணங்களுக்காக தங்கள் சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். குறிப்பாக தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த அல்லது தங்களுடைய மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அல்லது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள என பல காரணங்களுக்காக சொத்தின் மீது கடன் வாங்குகின்றனர். இந்தியாவில் தங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு உணர்வுபூர்வமான நெருக்கம் உள்ளதால் அவர்கள் தங்கத்தை எளிதாக விற்பதில்லை. அதனால் பெரும்பாலும் சொத்தின் மீது கடன் வாங்குவதையே விரும்புகின்றனர். மேலும் மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் பெறுவது மிகவும் எளிது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
சொத்தின் மதிப்பை அளவிடுவது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது. ஆனால் நமது சொத்தின் மதிப்பில் இருந்து 50 முதல் 60 சதவீதம் வரையிலான கடன் கண்டிப்பாக கிடைக்கும். எடுத்துக்காட்டாக ஒருவரிடம் ரூ. 1 கோடி மதிப்பிலான சொத்து இருக்கிறது என்றால் அவருக்கு ரூ.50 முதல் 60 லட்சம் வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கிய பின்பு சொத்தின் மதிப்பு அதிகரித்தால், கடன் தொகையும் அதிகரிக்கும்.
வீட்டுக் கடனை பெறுவதற்கு ஆகும் செலவை போல் சொத்தின் மீதான கடனை பெறுவதற்கும் செலவு ஆகும். எனவே எவ்வளவு கடனை வாங்கப் போகிறோம் என்று முதலிலேயே முடிவு செய்திருக்க வேண்டும்.
சொத்தின் மீதான கடனில் என்னென்ன நன்மைகள்?
மற்ற கடன்களைவிட சொத்தின் மீது கடன் வாங்குவது மிக எளிது. அதுபோல் மற்ற கடன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தைவிட சொத்தின் மீதான கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். மேலும் சொத்தின் மீது கடன் வாங்கினாலும் அந்த சொத்து உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். வங்கியிடம் கைமாறாது.
இந்தியாவில் சொத்தின் மீதான கடன் மிகவும் பிரபலமாகவில்லையானாலும், இந்த கடனில் ஏராளமான நன்மைகள் உண்டு என்பது மட்டும் உண்மை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications