பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...
  சென்னை: நம் வாழ்வில்தான் எத்தனை மாற்றங்கள். முன்பெல்லாம் படித்துவிட்டு உள்ளூரில் விவசாயம் செய்து கூட்டுக் குடும்பமாக மக்கள் வாழ்ந்தனர். இன்றோ படிக்க ஒரு ஊர், வேலைப் பார்க்க வெளிநாடு என பிள்ளைகள் பறக்கப் பெருமிதத்தில் பறக்கின்றனர் பெற்றோர். இது ஒரு புறம் இருக்க, வயதாகி தனிமையில் வாழும் பெற்றோர் பிள்ளை பாசத்திற்கு அடுத்தபடி பெரிதும் பாதிக்கப்படுவது உடல் நலத்தினால். வயதாகியதனால் வரும் நோய்கள் ஒரு பக்கம், அதனால் வரும் செலவு இன்னொரு பக்கம். வருமானம் இல்லாத இந்த காலக்கட்டத்தில் மருத்துவச் செலவு பாதிப்பை உண்டாக்கத்தான் செய்யும். இது மட்டும் இல்லாமல் தனிமையும், உடல்நிலை சரியில்லாத போது வரும் பதட்டமும் இன்னும் இந்த சூழ்நிலையை கடினம் ஆக்குகிறது. பிள்ளைகளுக்கும் இந்த கவலை உள்ளது. இதிலிருந்து தப்பிக்க முடியாவிட்டாலும் இந்த பதட்டத்தை குறைக்க உள்ள ஒரு வழி மருத்துவ காப்பீட்டு திட்டம்.

   

  இந்த திட்டம் மருந்துவ செலவை குறைப்பதோடு மன உளைச்சலையும் குறைக்கிறது. இந்த திட்டத்தில் பெற்றோரை சேர்ப்பது பிள்ளைகளின் கடமை என்று கூடச் செல்லலாம் தப்பில்லை. இந்த திட்டங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களை இங்கு பார்ப்போம்.

  வயது வரம்பு:

  60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களை காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் திட்டம் இல்லை என்று பொருள் இல்லை. இவர்களுக்கு கொஞ்சம் சந்தா அதிகமாக இருக்கும் அவ்வளவு தான். காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திட்டத்தை வைத்திருக்கும். இதனை நன்கு படித்து தேவையான திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு செய்யும் போது திட்டத்தின் புதுப்பித்தல் நிபந்தனைகளையும் பார்க்கவும். இன்றே திட்டம் எடுக்க கடினமென்றால், சில ஆண்டுகளுக்குப் பின் வயது திரும்பாது, திட்டம் இன்னும் கடினமாகும். எனவே, புதுப்பித்தல் இருக்கும் திட்டத்தை எடுக்க வேண்டும்.

  விரிவான பாதுகாப்பு:

  சில வருடங்களுக்கு முன்பு வரை நோய்கள் ஏற்கனவே இருந்தால் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதியோர்களை சேர்க்க மாட்டார்கள். ஆனால் இன்று அரசின் ஆணைப்படி ரத்த அழுத்தம், சக்கரை போன்ற நோய்கள் உள்ளவர்களை நிறுவனங்கள் தங்களுடைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கின்றன. ஆனால் இதற்கு சந்தா கொஞ்சம் அதிகம். காப்பீட்டு திட்டம் வாங்கும் போதே பார்த்து வாங்குவது நல்லது. பின்னர் வரும் அலைச்சல் குறையும்.

  பணம் செலுத்த தேவையில்லாத திட்டம்:

  உங்கள் பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் எடுக்கையிலேயே மருத்துவமனைகளில் பணம் செலுத்தத் தேவையில்லாத திட்டத்தை எடுக்கவும். காப்பீட்டு நிறுவனம் இந்த தொகையை கட்டிவிடும். இதனால் பெற்றோர் மருத்துவமனையில் சேரும் போதோ, டிஸ்சார்ஜ் ஆகும் போதோ பணம் கட்டத் தேவையில்லை.

  பெரியவர்களுக்கு திட்டம் வாங்கும் முன் மருத்துவப் பரிசோதனைச் செய்வது அவசியம். இந்தப் பரிசோதனை அவர்களுக்கு இருக்கும் நோய்களுக்கு ஏற்றவாறு காப்பீட்டு திட்டத்தை வாங்க உதவும்.

  நம்மைப் பாராட்டி சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்யும் கடமைகளில் ஒன்று அவர்களை வயதான காலத்தில் பார்த்துக் கொள்வது. அந்த வகையில் காப்பீடு வாங்குவதும் சேரும். நல்ல திட்டத்தை ஏஜெண்ட்களிடம் விசாரித்து இன்டர்நெட்டில் ஒப்பிட்டு வாங்கவும்.

   

  நல்ல பிள்ளையாகத் தாய் தந்தைக்கு நல்ல ஒரு காப்பீட்டு திட்டத்தை எடுத்துக் கொடுங்கள்... அவர்களின் சுமையை கொஞ்சம் குறையுங்கள்!

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Why it is important to cover your parents? | பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

  In today's world, most children leave home and settle abroad or in different parts of the country in search of better career opportunities. While this is a matter of pride for any parent, the fact that they feel insecure about their health and finances living alone cannot be denied. Not only the parents, but their children also worry about their well being. As a result, health insurance plans for parents prove to be wonderful tools that help in managing the health costs of the seniors while they need it the most. If you are looking to cover your parents under a health insurance plan, you must be aware of the various policies available and more importantly, you must know what exactly they offer and what they hold back.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more