நீங்க லோன் கேட்டா தர மாட்டீங்கிறாங்களா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க லோன் கேட்டா தர மாட்டீங்கிறாங்களா?
உங்களது கடன் விண்ணப்பத்தை அங்கீகரித்துக் கடனளிக்கும் முன் வங்கிகள் சில விஷயங்களைக் கருத்தில் கொள்கின்றன. அவர்களுக்கென சில விதிகள் மற்றும் அளவுகோல்கள் , கடன் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிப்பதற்காகவென்று உள்ளன.

 

கடன் பெற விண்ணப்பிக்கும் முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றிக் காணலாம்.

1. அடிக்கடி வேலை மாறுதல்.

இன்றைய காலத்தில் அடிக்கடி வேலை மாற்றுவது ஒரு வழக்கமான போக்காக மாறிவிட்டது. வங்கிகள் வேலையின் நிரந்தரத் தன்மையை முக்கியமாகக் கருதுகின்றன. உங்கள் அலுவலகத்திடம் உறுதி செய்து கொண்ட பின்பே கடன் விண்ணப்பத்தை அங்கீகரிக்கின்றன.

2). கடன் நிலுவையில் வைப்பது.

நீங்கள் குடியிருக்கும் முகவரி "கடன் நிலுவையாளர் முகவரி" யாக சிபிலில் புகார் செய்யப்பட்டிருந்தால் உங்கள் லோன் நிராகரிக்கப்பட வைப்புகள் அதிகம். அது போன்ற சமயங்களில் வங்கியின் தொடர்பு மேலாளரோது இது குறித்து விவாதிக்க வேண்டும். இதற்கு முன் அங்கு வாடைகைக்கு இருந்த கடன் நிலுவையாளரோடு உங்களுக்கு தொடர்பில்லை என்பதை அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

3). பழைய கட்டிடம்.

வீட்டுக்கடனாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வாங்கும் கட்டிடம் 20, 25 வருடங்கள் பழையதாக இருந்தால் வங்கிகள் கடன் தருவதில்லை.

4) முந்தைய கடன் மறுப்புகள்.

இதற்கு முன்னர் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அந்த விவரம் வங்கியின் தரவுதளத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். உங்களது தற்போதைய கடன் விண்ணப்பத்தின் மீது இதன் தாக்கம் இருக்கலாம். இது போன்ற சமயங்களில் கடன் மேலாளரை சந்தித்து உங்கள் நிலையை தெளிவுபடுத்தலாம்.

5) முந்தைய கடன்கள்.

உங்களுக்கு பல கடன்கள் இருந்து, உங்கள் வருமானம் வங்கி விதிமுறைகளின் அமையாவிட்டால் வங்கிகள் உங்கள் கடனை அங்கீகரிப்பது கடினம் . ஏற்கனவே தனி நபர் கடன் எடுத்திருக்கும் நீங்கள், வீட்டுக்கடன் வாங்க முற்பட்டால் இது போன்ற சூழ்நிலை ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் நீங்கள் உங்கள் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது இருக்கும் கடன்களை அடைத்து விட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan லோன் கடன்
English summary

5 reasons why your loan could be rejected | நீங்க லோன் கேட்டா தர மாட்டீங்கிறாங்களா?

5 reasons why your loan could be rejected
Story first published: Monday, April 15, 2013, 17:55 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?