பங்கு வர்த்தகம் செய்ய யாருக்காவது பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்கப் போறீங்களா? முதல்ல இதைப் படிங்க

பங்கு வர்த்தகம் செய்ய யாருக்காவது பவர் ஆஃப் அட்டர்னி கொடுக்குறீங்களா? முதல்ல இதைப் படிங்க
சென்னை: பவர் ஆஃப் அட்டர்னி என்பது ஒருவருக்கு நம் வங்கி அல்லது டீமாட் கணக்கின் மீதோ அல்லது சொத்தின் மீதோ சட்டபூர்வமாக அதிகாரம் வழங்குவதாகும். இந்த அதிகாரத்தின் அளவு எவ்வளவு என்பது அதில் குறிப்பிட்டிருக்கும்.

பவர் ஆஃப் அட்டர்னி என்பது கட்டாயமான ஒன்று கிடையாது. ஒரு முதலீட்டாளராக, பவர் ஆஃப் அட்டர்னி கொடுப்பதா வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பவர் ஆஃப் அட்டர்னியை செபியில் முறையாக பதிவு செய்த பங்குத் தரகரின் நிறுவனத்தின் பெயரால் எடுக்க வேண்டும். மாறாக அதில் வேலை செய்யும் பணியாளர்களின் பெயரில் எடுக்கக் கூடாது. இந்த ஆவணத்தில் அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குதாரர்களும் கையெழுத்திட வேண்டும்.

இரண்டு வகையான பவர் ஆஃப் அட்டர்னி:

1. குறிப்பிட்ட/வரம்புக்குட்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி:

இதன் பெயரைப் போலவே, இந்த ஆவணத்தை பெற்றவருக்கு குறிப்பிட்ட அளவே அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும்.

2. பொது பவர் ஆஃப் அட்டர்னி:

இந்த ஆவணத்தை பெற்றவருக்கு நம் சார்பில் முழு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த ஆவணத்தை பெற்றவர்கள் கையில் மொத்த அதிகாரமும் இருக்கும்.

பவர் ஆஃப் அட்டர்னியை குறிப்பிட்ட காலத்திற்கே செல்லுபடியாகும் படி வழங்கிட வேண்டும். எப்போதுமே அதை கால வரையற்றதாக வழங்க கூடாது.

செய்யக் கூடியவைகள்:

1. குறிப்பிட்ட/வரம்புக்குட்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி மட்டுமே வழங்கிட வேண்டும்.
2. எந்த காலம் வரை பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகும் என்பதை குறிப்பிடவும்.
3. அதிகாரத்தை திரும்பப் பெறுவதற்கான உட்பிரிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதா என்று சரிப்பார்க்கவும்.
4. ஒப்பந்த குறிப்புகள், கணக்கு அறிக்கைகள், டீமாட் கணக்கின் பரிமாற்ற குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு வந்து சேர வேண்டும் என்று வற்புறுத்தும் அளவுக்கு உங்கள் கை ஓங்கியிருக்க வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்:

1. எந்த ஒரு வெளி வணிக நடவடிக்கையில் ஈடுபட அதிகாரம் அளிக்கக் கூடாது.
2. முதலீடு செய்ய முடிவெடுப்பதற்கு அதிகாரம் அளிக்கக் கூடாது.
3. வாடிக்கையாளர் மார்ஜின் கணக்கில் அடங்கும் வணிக உறுப்பினர் சேர்மம் கணக்கைத் தவிர பங்கு அல்லது பணத்தை கணக்கிலிருந்து மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கக் கூடாது.

மனதில் வைத்துக் கொள்ள வேண்டியவை:

1. பரிமாற்ற தகவல்களான ஒப்பந்த குறிப்புகள், மார்ஜின் தகவல்கள் போன்றவற்றை சீரான முறையில் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.
2. உங்களின் டீமாட் கணக்கின் பண பரிமாற்றங்களை அடிக்கடி ஆய்வு செய்யுங்கள்.
3. எப்போதுமே பவர் ஆஃப் அட்டர்னியில் உங்கள் கணக்கை துவங்கவும், மூடவும் அதிகாரம் அளிக்கக் கூடாது.
4. ஏதாவது குறைபாடு ஏற்பட்டால் உடனே அந்த பிரச்னையை தரகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அது எழுத்து மூலமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.

பவர் ஆஃப் அட்டர்னி வழங்கினாலும், உங்கள் கணக்கை எந்த நேரமும் நீங்கள் இயக்கிக் கொள்ளலாம். பவர் ஆஃப் அட்டர்னி வழங்கியதும், செயல்படுத்தும் ஆவன நகலை மறக்காமல் வைத்துக் கொள்ளவும். கூட்டுக் கணக்காக இருப்பின் அந்த கணக்கை வைத்திருக்கும் அத்தனை பேரும் ஆவணத்தை செயல்படுத்தும் போது கையெழுத்திட வேண்டும்.

மரணம் ஏற்படும் போது பவர் ஆஃப் அட்டர்னி செல்லுபடியாகாமல் போய்விடும். அப்போது மறுபடியும் புதிதாக ஒரு பவர் ஆஃப் அட்டர்னி ஆவணத்தை எழுத வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+