வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்?
சென்னை: ஒரு நிதியாண்டின் முடிவில் உங்களுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைப்பதற்கான வழிமுறைகளை முன்கூட்டியே செயல்படுத்திக் கொள்வது நன்று. வரி குறைப்பிற்கான திட்டமிடுதலை நீங்கள் தள்ளிப் போடப் போட, உங்கள் நிகர வருமானத்தைக் கூட்டிக் கொண்டே போய், வருடக் கடைசியில் அதிகமான வரியைக் கட்டும் நிலைக்கு ஆளாவீர்கள். நடப்பு நிதியாண்டான 2013-2014ல் உங்கள் வரி விதிப்பை குறைக்க பின்வருமம் யோசனைகளை உடனே செயல்படுத்துங்கள்.

உங்கள் வருமானத்தை பலவாறு பிரித்து வட்டியைக் குறைக்கலாம்:

ஏற்கனவே உங்கள் வருமானம், வருமான வரி விதிப்பிற்குட்பட்டதாக இருப்பின் உங்களுக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் குறைத்தால் மட்டுமே, உங்களுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க இயலும். வைப்புத் தொகை, மற்றும் இதர வட்டி வழங்கும் திட்டங்களை உங்கள் வாழ்க்கைத் துணையின் பெயரில் வாங்குவதன் மூலம் இதனை செயல்படுத்தலாம்.

உங்கள் பெற்றோர் பெயரில் முதலீடு செய்யுங்கள்:

உங்கள் பெற்றோருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வருமானம் ஏதும் இல்லாத பட்சத்தில் அவர்களை உங்களுக்காக முதலீடு செய்து அதனால் கிடைக்கும் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளலாம். மூத்த குடிமக்களுக்கான அடிப்படை வரி விலக்கு வரையறை, ரூபாய் 2.5 லட்சம் என்பதையும், வைப்புத் தொகை போன்ற நிலையான சேமிப்புத் திட்டங்கள் பலவற்றில், அவர்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகின்றது என்பதையும் நினைவில் கொள்க.

உங்கள் பெற்றோரின் வீட்டில் தங்கியிருப்பின் அவர்களுக்கு நீங்கள் வாடகை கொடுக்கலாம்:

உங்கள் பெற்றோரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வீட்டில் நீங்கள் தங்கியிருந்தீர்களானால் அவர்களுக்கு நீங்கள் வாடகை செலுத்தி, அதன் மூலம் வீட்டு அகவிலைப்படியைக் கோரலாம்.

வரியற்ற கடன் பத்திரங்கள்:

நீங்கள் 33 சதவிகித வரி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் பட்டியலிடப்பட்ட சில வரியற்ற கடன் பத்திரங்களைப் பற்றி யோசிக்கலாம். இக்கடன் பத்திரங்களால் கிடைக்கும் வட்டித் தொகை வரி விலக்கு பெற்றுள்ளதால் இது உங்கள் வருமானத்தின் பகுதியாக கருதப்பட மாட்டாது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை, ஆர்இசி, இந்திய ரயில்வேயின் நிதி ஸ்தாபனம் ஆகியவற்றின் கடன் பத்திரங்கள், தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள சில கடன் பத்திரங்கள் ஆகும்.

உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசியுங்கள்:

சில சலுகைகளுக்கு வரி விலக்கு அமலில் உள்ளது. நீங்கள் உணவுப் படிவங்கள் மற்றும் பயணப்படி ஆகியவற்றை உபயோகித்து உங்கள் வரி விதிப்பைக் குறைக்கலாம். நீங்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் சம்பளத்தைப் பிரிக்கலாம் என்று உங்களை பணியில் அமர்த்தியவரிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

பங்குகளை ஒரு வருட காலத்திற்கு வைத்திருந்து பின் விற்கலாம்:

நீங்கள் பங்குகள் மூலம் கை நிறைய லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தீர்களானால் ஒரு வருடத்திற்குப் பிறகு அப்பங்குகளை விற்பது நலம். ஒரு வருட காலத்திற்கு முன் இப்பங்குகளை விற்றால் நீங்கள் விற்பனை லாபம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதையும், அது உங்கள் வரி விதிப்பை உயர்த்தும் என்பதையும் மறக்காதீர்கள்.

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துங்கள்:

உங்கள் ஃபோர்ட்போலியோக்களை பலவகைப்படுத்துவதன் மூலம் உங்களுக்கான வரி விதிப்பைக் குறைக்கலாம். உதாரணமாக, உங்களுக்கு வாடகை மற்றும் வட்டி ஆகியவற்றின் மூலம் பணம் வருகிறது என்றால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யலாம். பங்கு லாபத் தொகைக்கு வரி கிடையாது. மேலும் இப்பங்குகளை ஒரு வருடத்திற்குப் பிறகு விற்றால் அவற்றின் விற்பனை லாபத்திற்கு நீங்கள் வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் நீங்கள் வைப்புத் தொகை திட்டங்களில் முதலீடு செய்தால், அதில் கிடைக்கும் வட்டி வருமான வரிக்குட்பட்டதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A few tips to reduce your tax liability in FY 2013-14 | வருமான வரியை எப்படியெல்லாம் சேமிக்கலாம்?

It's best to implement tax savings measures well in advance to reduce your tax liability at the end of the year. The longer you delay your tax planning, you would boost your income accordingly and end the year paying a higher tax. Above are a few tips to reduce tax liability for FY 2013-14, which you could implement immediately.
Story first published: Monday, April 8, 2013, 13:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X