மலிவான மருத்துவ காப்பீடுகள் எவை எவை?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: தற்போது ஏராளமான நிறுவனங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டங்களை(ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை) வழங்குகின்றன. இதனால் எந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வது என்று தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். எனவே இந்த குழப்பங்களைத் தவிர்க்க ஒருசில மலிவான மருத்துவ காப்பீட்டு திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

20 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு

இந்த வயதுக்குட்பட்டவர்கள் ரூ.1 லட்சத்திற்கான கவரேஜை விரும்பினால் அவர்கள் தேசிய காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அது அவர்களுக்கு மலிவாக இருக்கும். ரூ.2 லட்சத்திற்கான கவரேஜை விரும்பினால் மேக்ஸ் பூபா வழங்கும் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ரூ.5 லட்சத்திற்கான கவரேஜை விரும்பினால் ரெலிகேர் கேர் வழங்கும் திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில் மேற்கூறிய திட்டங்கள் மலிவானவையாக இருக்கும்.

26 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு

இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மிக மலிவான ஒரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,461 பிரீமியம் தொகை கட்ட வேண்டும். அதற்கடுத்ததாக பாரதி அக்சா மற்றும் மேக்ஸ் பூபா ஆகிய நிறுவனங்கள் ரூ.2 லட்சம் மற்றும் ரூ.5 லட்சத்திற்கான கவரேஜுகளை மலிவாக வழங்குகின்றன.

31 முதல் 35 வயதிற்குட்பட்டவர்களுக்கு

இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு, ரூ.1 லட்சத்திற்கான கவரேஜை, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மிக மலிவாக வழங்குகிறது. அதனைத் தொடர்ந்து இவர்களுக்காக ரூ.2 லட்சத்திற்கான கவரேஜை பாரதி அக்சாவும், ரூ.5 லட்சத்திற்கான கவரேஜை ரெலிகேர் கேரும் மலிவாக வழங்குகின்றன.

36 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு

இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு நியூ இந்திய அஸ்யூரன்ஸ் மருத்துவ காப்பீட்டு பிரீமியம் தொகையாக ரூ.1,741ஐ நிர்ணயித்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரூ.2 லட்சத்திற்கான கவரேஜை அப்போலோ முனீச்சும், ரூ.5 லட்சத்திற்கான கவரேஜை ரெலிகேர் கேர் நிறுவனமும் மிக மலிவாக வழங்குகின்றன.

41 முதல் 46 வயதிற்குட்பட்டவர்களுக்கு

இந்த வயதிற்குட்பட்டவர்களுக்கு, ரூ.1 லட்சத்திற்கான கவரேஜை யுனைடெட் இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மலிவாக வழங்குகிறது. அதுபோல் ரூ.2 லட்சத்திற்கான கவரேஜை ராயல் சுந்தரம் நிறுவனமும், ரூ.5 லட்சத்திற்கான கவரேஜை ரெலிகேர் கேர் நிறுவனமும் மலிவாக வழங்குகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: insurance
English summary

A look at the cheapest health insurance plans in India | மலிவான மருத்துவ காப்பீடுகள் எவை எவை?

Health insurance plans can get rather complicated with the various riders and multiple benefits they offer. You cannot look at the face value of a health insurance plan and decide. We have listed herewith the cheapest health insurance plans for various age groups. But, cheapest does not mean the best. Investors need to go into the details before they decide.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns