அவசர பணத் தேவையா? இருக்கவே இருக்கு எமர்ஜென்சி லோன்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திடீர் அவசரமா? இருக்கவே இருக்கு எமர்ஜென்சி லோன்
சென்னை: எமர்ஜென்சி என்பது ஒரு அலாரம் போன்றது; அது அடிக்கும் போது தான் நாம் விழித்துக் கொள்வோம். நம்மைப் பொறுத்தவரை, எமர்ஜென்சி என்பது சர்வதேச சுற்றுலாவிலிருந்து கல்வி அல்லது மருத்துவ எமர்ஜென்சி வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(April 23: Gold rates in major cities)

செக்யூரிட்டைஸ்ட் கடன்கள்:

இதன் பெயரே தெளிவாக உணர்த்துவதைப் போல் இது ஒரு வங்கியில் செக்யூரிட்டி அல்லது ஈடு போல் ஒன்றை வைத்துப் பெறக்கூடிய ஒரு கடன் வகையாகும். இவ்வகைக் கடன்களில் காணப்படும் லோன் வகைகள் பின்வருமாறு:

1) தங்கக் கடன்கள்: தங்கம் என்பது நம்மில் பலரும் விரும்பக்கூடிய பாரம்பரியமிக்க ஒரு பொருளாக உள்ளது. கல்யாணத்திற்காகவோ அல்லது முதலீட்டுக்காகவோ, காரணம் எதுவாக இருப்பினும், அதனை வாங்குவது நம் மனதுக்கு உகந்த ஒன்றாக உள்ளது. அவ்வளவாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தில் சிறிதளவை எமர்ஜென்சி லோன் வாங்குவதற்கு உபயோகிக்கலாம். முன்னணி வங்கிகளான, ஹெச்டிஎஃப்சி போன்றவை, தங்கக் கடன்களுக்கு சொல்லிக் கொள்ளும்படியான நல்ல வட்டி விகிதங்களை வழங்குகின்றன. தங்கத்தின் மதிப்பிலிருந்து சுமார் 60 சதவீதம் வரை கடன் வாங்க இயலும்.

2) செக்யூரிட்டிகளை வைத்து கடன்: நாம் முதலீட்டுக் காரணங்களுக்காக இன்சூரன்ஸ், பிபிஎஃப், வைப்புத் தொகைகள், பங்குகள் போன்ற செக்யூரிட்டிகள் பலவற்றை வாங்கியிருப்போம். அவ்வாறான செக்யூரிட்டிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியும். கடன் தொகை செக்யூரிட்டியின் மதிப்பைப் பொறுத்து வேறுபடும். பிபிஎஃப் போன்ற சில வகை செக்யூரிட்டிகளை குறிப்பிட்ட காலம் வரை வைத்திருந்த பின்னரே கடன்கள் வாங்க உபயோகிக்க முடியும்.

3) சொத்துக் கடன்கள்: சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் வாங்கலாம். சொத்து மதிப்பிலிருந்து சுமார் 40 முதல் 70 சதவீதம் வரை கடன்கள் வாங்கலாம். இவ்வகைக் கடன்களுக்கான காலவரையறை வழக்கமாக 10 முதல் 15 வருடங்களாக இருக்கும்; இது மற்ற கடன்களைக் காட்டிலும் சற்று அதிகமாகும். இவ்வகைக் கடன்கள் அதிகமான தொகை தேவைப்படும் போது மிகவும் உபயோகமாய் உள்ளன.

செக்யூரிட்டைஸ்ட் கடன்கள், நிச்சயமாக மலிவானவையே. ஆனால், கடன் செலுத்தத் தவறும் பட்சத்தில் சொத்தின் மேல் உள்ள உரிமையை இழக்க நேரிடும் அபாயம் உண்டு.

அன்செக்யூரிட்டைஸ்ட் கடன்கள்:

இது, செக்யூரிட்டியோ அல்லது வேறு ஏதேனும் ஈடோ அடமானம் வைக்கத் தேவையில்லாத வகைக் கடனாகும். இதில் இருக்கக்கூடிய வகைகள் பின்வருமாறு,

1) பர்சனல் லோன்கள்: இது, எமர்ஜென்சி லோனின் மிகப்பிரபலமான ஒரு கடன் வகையாகும். இவை மிகவும் எளிதாக, விரைவாக மற்றும் இன்னல்கள் அற்றனவையாக இருப்பதே இவை பிரபலமாய் இருப்பதற்கான காரணங்களாகும். இதில், செக்யூரிட்டியோ அல்லது வேறு ஏதெனும் சொத்துக்களோ அடமானம் வைக்கத் தேவையில்லை. ஆதலால் இதை ஆன்லைனில் ஒரு பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் கூட வாங்கலாம்.

2) கிரெடிட் கார்டுகள்: இவை "உபயோகிக்கத் தயாரான" நிலையில் உள்ள எமேர்ஜென்சி கடன் வகையாகும். இப்போதெல்லாம், கிரெடிட் கார்டு பெறுவது மிக சுலபமான ஒன்றாக உள்ளது. சரியான காலத்திற்குள் அனைத்து தவணைகளையும் ஒழுங்காக செலுத்துதல் மற்றும் குறைந்த பட்சத் தொகையை மட்டுமே தொடர்ந்து செலுத்துவதைத் தவிர்த்தல், போன்றவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

முடிவுரை: கடன் வாங்குவதற்கான காரணத்தில் தெளிவாக இருத்தல் அவசியம். மேலும், எமர்ஜென்சி லோனுக்கு ஆவண செய்யும் முன் வட்டி விகிதங்கள், ப்ராசஸிங் கட்டணங்கள், ப்ரீபேமென்ட் அபராதங்கள் போன்ற பல அம்சங்களை ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். பெரும்பாலான கடன்கள், முக்கியமாக ஈடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் உடைய கடன்கள், தேவைக்கேற்ப தேர்வு செய்யக் கூடியனவாக உள்ளன. முடிவாக, மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவசர காலத்துக்குத் தேவையானதைச் சேமித்து வைத்திருத்தல் அவசியம். அவசரகால நெருக்கடிகள் தவிர்க்கவியலாதவை; அதனால், அவற்றைச் சந்திக்க எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Emergency Loan – Comparison of various options | திடீர் அவசரமா? இருக்கவே இருக்கு எமர்ஜென்சி லோன்

Emergency is like an alarm. We wake up only when it strikes. For us, an emergency could be anything from booking an International vacation to Education or Medical emergency. And, we all love the word ‘Loan'. There are people who feel loans have been designed especially for them and that they are never a burden. When we know that uncertainties are definitely certain in our lives, why not prepare for them instead of carrying a debt on the shoulders? However, I agree that there are cases where we are caught unaware and look for help. Let us now compare the different loan options available in an emergency situation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X