
அடிப்படையான, ஃபார்ம் 16-இல் இருந்து ஆரம்பிக்கலாம். நீங்கள் சம்பளம் வாங்கும் தனிநபராக இருப்பின், இப்படிவம் உங்கள் எம்ப்ளாயரால் வழங்கப்பட்டு அனைத்து அடித்தளங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இது உங்கள் மொத்த வருமானம், வரிவிதிக்கத்தக்க வருமானம், நீங்கள் செய்துள்ள வரி சேமிப்புத் திட்டங்கள், மற்றும் உங்கள் வருமானத்திலிருந்து பிடிக்கப்பட்ட வரித்தொகை போன்ற அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக இருக்கும்.
வேறு விதமாக சொல்வதானால் ஃபார்ம் 16 என்பது நீங்கள் உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன்பு உங்கள் வருமானம் மற்றும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி ஆகியவற்றுக்கான சான்றாகும்.
ஈக்விட்டி லிங்க்ட் சேவிங்க்ஸ் ஸ்கீம்ஸ் (இஎல்எஸ்எஸ்) மற்றும் பிபிஎஃப் போன்றவற்றில் செய்திருக்கும் முதலீடுகள், ஆயுள் காப்பீடுக்கான தவணை போன்ற துணைப் பிடித்தங்களுக்கான சான்றுகளை, நீங்கள் உங்கள் நிறுவனத்தின், சம்பளம் வழங்கும் துறையில் சமர்ப்பித்திருப்பீர்கள்.
தர்ம காரியங்களுக்கான நன்கொடைகளை, ஃபார்ம் 16-இல் சேர்க்கவியலாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வகையான நன்கொடைகள், வருமான வரிச் சட்டத்தின் 80ஜி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, வரி விலக்குக்குட்பட்டதாக இருப்பினும், அதனை நீங்கள், உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது தனியாகத் தான் கோர முடியும்.
ஃபார்ம்: ஐடிஆர்-1 (ஸாஹஜ்)
தனிநபர்கள், பின்வருவனவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டவராய் இருப்பின், இந்த படிவம் அவர்களுக்கு பொருத்தமானது.
• சம்பளம்/ஓய்வூதியம் மூலம் வருமானம்
• ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் - முந்தைய வருடங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த இழப்புகளைத் தவிர்த்து
• பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் - லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததினால் கிடைத்த வருமானத்தைத் தவிர்த்து
ஃபார்ம்: ஐடிஆர்-2
இப்படிவம், வியாபாரம் அல்லது தொழில் மூலம் வருமானம் ஏதும் இல்லாத, தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப்-களுக்கானது. இது, பின்வருவனவற்றைத் தவிர்த்து, மற்ற விதங்களில், ஐடிஆர்-1 படிவத்தை ஒத்துள்ளது.
• ஐடிஆர்-1 படிவத்தை, ஹெச்யூஎஃப்-கள்(ஒருங்கிணைந்த இந்து குடும்பம்), நிரப்பவியலாது
• ஒரு தனிநபருக்கு, வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் அவர் முந்தைய வருடங்களில் இருந்து, முன்னெடுத்து வந்திருந்த இழப்புகள்
• ஒரு தனிநபருக்கு, ஒரு வீட்டு உடைமையின் மூலம் கிடைக்கும் வருமானம்; மற்றும் அவருக்கு ஒரு வீட்டிற்கு மேல் சொந்தமாக இருக்ககக்கூடிய வீட்டு உடைமைகள்
• லாட்டரிச் சீட்டிலோ அல்லது குதிரைப் பந்தயத்திலோ ஜெயித்ததன் மூலம் கிடைத்த வருமானம்
ஃபார்ம்: ஐடிஆர்-3
நிறுவனங்களில், பார்ட்னர்களாக இருக்கும்; ஆனால், சொந்தமாக தொழில் அல்லது வியாபாரம் எதுவும் செய்யாமல் இருக்கும் தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இந்தப் படிவம்.
ஃபார்ம்: ஐடிஆர்-4
வணிக வருமான வரி தாக்கல்: சொந்தமாக செய்யும் வியாபாரம் அல்லது தொழில் மூலம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மற்றும் ஹெச்யூஎஃப் -களுக்கானது இப்படிவம்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications