பங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி?
சென்னை: பங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது என்பது அவ்வளவு எளிது கிடையாது. எவ்வளவு கடினம் என்று பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களைக் கேட்டால் தெரியும். பங்கு வர்த்தகத்தில் அவ்வாறு நல்ல பங்குகளை வாங்க வேண்டும் என்றால் அதற்கு பொறுமை தேவை. குறிப்பாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள், உங்களுக்கு உதவியாக இருக்கும்.

 

பங்குகளை வழங்கும் நிறுவனங்களின் நீண்ட கால சாதனைகளைப் பார்த்தல்

ஒரு சிலர் பங்கு வர்த்தகத்தில் நஷ்டத்தை சந்திக்க காரணம் அவர்கள் நிறுவனங்களின் நீண்ட கால செயல்பாடுகளைப் பார்க்காமல், யாரோ சொன்னார்கள் என்பதற்காக எந்த நிறுவனத்தின் பங்குகளிலிலும் முதலீடு செய்வதாகும். அது ஒரு தவறான முடிவாகும். எனவே பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக பங்குகளை வெளியிடும் நிறுவனங்களின் நீண்ட கால செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும்.

உறுதியான வர்த்தக திட்டம்

பல நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் திடீரென்று அதிக சென்செக்ஸ் புள்ளிகளைப் பெறுகின்றன. ஆனால் விரைவில் காணாமல் போய்விடுகின்றன. அதற்கு காரணம் அவர்கள் வைத்திருக்கும் வர்த்தக திட்டம் தோல்வி அடைவதாகும். எடுத்துக்காட்டாக தற்போதைய சூழலில், இந்துஸ்தான் யூனிலிவர் அல்லது லார்சன் அன்ட் டூப்ரோ போன்ற நிறுவனங்கள் தோல்வி அடையாது என்று உறுதியாக நம்பலாம். எனவே நிறுவனங்களின் உறுதியான வர்த்தக திட்டங்களைப் பார்த்து அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தல்

நீண்ட கால பங்குகளில் முதலீடு செய்வது என்பது எப்போதுமே அதிக லாபத்தைத் தரும். குறிப்பாக இன்போசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் போன்றவை நீண்ட கால பங்குகளை வெளியிடுகின்றன. இந்த பங்குகளில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.

பங்குகளின் விலையைத் தேடி அலைய வேண்டாம்

லீமன் பிரதர்ஸ் பிரச்சனை வந்த பின்பு பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த பலர், பங்குகளின் விலையைத் தேடி அலைந்தனர். எடுத்துக்காட்டாக தற்போது ரூ.234க்கு விற்பனையாகும் டிஎல்எப் நிறுவனத்தின் ஒரு பங்கை அப்போது ரூ.1200க்கு வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் தயாராக இருந்தனர். எனவே பங்கு வர்த்தகத்தின் அடிப்படை நெளிவு சுழிவுகள் தெரியவில்லையானால், ஒரு ஆலோசகரை வைத்துக் கொள்வது நல்லது.

பிரித்து முதலீடு செய்தல்

பங்குகளை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒரே நிறுவனத்தின் பங்குகளில் மொத்தமாக முதலீடு செய்து விடாமல் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

உங்கள் பங்கு வர்த்தக நடவடிக்கைகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள்

ஒரு சில நிறுவனங்களில் ஏற்படும் நிர்வாகப் பிரச்சனைகள் மற்றும் மாற்றங்கள் போன்றவற்றினால், அவற்றின் பங்குகளின் விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அவற்றை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்ப உங்கள் பங்கு வர்த்தக நடவடிக்கைகளை பரிசோதனை செய்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

இறுதியாக பங்கு வர்த்தகத்தில் லாபம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரே இரவில் அதிக லாபத்தை அள்ளிவிட வேண்டும் என்று கனவு காணக் கூடாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to build a good portfolio of stocks? | பங்கு வர்த்தகத்தில் நல்ல பங்குகளை வாங்குவது எப்படி?

It's never easy to build a portfolio and if you ask folks, they would tell you it has taken years to build a solid portfolio. Take a look at a few things to keep in mind before building a portfolio.
Story first published: Thursday, April 18, 2013, 14:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X