மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்களை (என்சிடி) வாங்குவது எப்படி?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்களை (என்சிடி) வாங்குவது எப்படி?
சென்னை: மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்களான என்சிடி-க்களை வாங்குவதற்கு, உங்களுக்குத் தேவையானவை, வழக்கமான வர்த்தக மற்றும் டீமாட் கணக்குகளாகும்.

என்சிடி-க்களை வாங்குவதற்கு, நீங்களே உங்கள் வர்த்தகக் கNakணக்குக்குள் புகுபதிகை (லாக் இன்) செய்து நேரிடையாக வாங்கலாம் அல்லது உங்கள் தரகரை உங்கள் சார்பாக வாங்கச் செய்யலாம். பங்குகளை வாங்குவதற்கு உபயோகிக்கும் முறையை பயன்படுத்தி, பங்குகளை வாங்குவதற்க்கான அதே அளவு தரகுத்தொகையையே தந்து, என்சிடி-க்களை வாங்கலாம். இந்த என்சிடி-க்கள் உங்கள் டீமாட் கணக்கில் சேர்க்கப்படும்.

என்சிடி-க்கள், நிலையான படிவ மதிப்பு பெற்றிருப்பதனால், நீங்கள் வட்டித் தொகையை, அந்நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்ட பதிவேட்டுத் தேதியில் பெறுவீர்கள். உதாரணமாக, நீங்கள் ஸ்ரீராம் போக்குவரத்தின் என்சிடியை மார்ச் 10-இல் வாங்கியிருந்து, பதிவேட்டுத் தேதி மார்ச் 15 -ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றால், நீங்கள் அதற்கான வட்டித்தொகையை நடப்பு ஆண்டிலேயே பெறுவதற்கு உரியவர்களாவீர்.

ஆனால், நீங்கள் மார்ச் 16-இல் வாங்கியிருந்தீர்களெனறால், வட்டித் தொகையை அடுத்த ஆண்டில் தான் பெற முடியும். கூர்ந்து கவனித்தால், என்சிடியின் விலை தானாகவே விழுந்து, அதற்கான வட்டித்தொகை, மார்ச் 10-இல் இருந்ததை விட நீங்கள் வாங்கக் கூடிய தினமான மார்ச் 16-இல் குறைந்து இருப்பதை உணரலாம்.

தற்போது, பெரும்பாலான என்சிடி-க்கள் பல வங்கி வைப்பு நிதிகளை விடவும், பல தொடக்க முகப்பு மதிப்புத் திட்டங்களை விடவும் அதிக லாபம் ஈட்டக்கூடியதாக விளங்குகிறது.

இது எவ்வாறு செயல்படுகிறது?

தற்சமயம், பல நிறுவனங்கள் அடங்கிய குழு ஒன்று, மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியது. இந்தியா இன்ஃபோலைன், ரெலிகேர், ஸ்ரீராம் போக்குவரத்து நிதி நிறுவனம் ஆகியன அக்குழுவில் இடம்பெற்ற சில நிறுவனங்கள் ஆகும். இந்நிறுவனங்கள், என்சிடி-க்களை ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரையிலான கால அளவில் வழங்கி பணம் ஈட்டி வருகின்றனர், வாங்கப்பட்ட என்சிடி-க்களுக்கான வட்டி விகிதமோ அல்லது படிவ மதிப்போ உங்களுக்கு வழங்கப்படும்.

உதாரணமாக, ஸ்ரீராம் போக்குவரத்து நிறுவனம் 1000 ரூபாய் முகமதிப்போடு கூடிய என்சிடிக்களை வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த என்சிடிக்கள் பல்வேறு சந்தைகளின் பட்டியல்களில், ஏதாவதொரு விலையில் இடம்பெறும். நீங்கள் இந்த என்சிடிக்களை வாங்க விரும்பினால், அவற்றை கையகப்படுத்திக் கொள்ளலாம். ஸ்ரீராம் நிறுவனம், நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குப் பின், உங்கள் தொகையை உங்களுக்கு திருப்பி செலுத்துவர். நீங்கள் என்சிடிக்களை கைக்கொண்டிருக்கும் காலத்தில், அதற்குண்டான வட்டியை, தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பீர்கள். உங்கள் பணத்தேவையை ஈடுசெய்ய, நீங்கள் உங்கள் என்சிடிக்களை சந்தைகளில் விற்கலாம். ஆனால், அவ்வாறு விற்கும்போது நீங்கள் வட்டித் தொகை எதுவும் பெற இயலாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to buy NCDs or non convertible debentures? | மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்களை (என்சிடி) வாங்குவது எப்படி?

You need to have the usual trading and a demat account to buy a non convertible debenture (NCD). The process to buy a NCD is the same as that for a share. You log into your trading account or ask your broker to buy you an NCD on your behalf. The manner in which you buy and the brokerage is the same as that for shares. The NCDs are held in your demat account. Since NCDs carry a fixed coupon rate, you would receive the interest payment on the record date fixed by a company. Say for example, you buy a NCD on March 10 of Shriram Transport and the record date is fixed at March 15, you would be entitled to interest to be paid for the year. However, if you buy on March 16, you would get interest only in the next year. It's interesting to note that the price of the NCD would fall automatically and would be lower on March 16, as compared to March 10, when you would be entitled to interest. Most of the NCDs are presently offering a yield that is higher then most of the bank deposits and even higher then the initial at par offering.
Story first published: Friday, April 5, 2013, 12:36 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns