உங்கள் வங்கி சேமிப்புக் கணக்குக்கு எப்படி வட்டியைக் கணக்கிடலாம்?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

உங்கள் வங்கி சேமிப்புக் கணக்குக்கு எப்படி வட்டியைக் கணக்கிடலாம்?
சென்னை: பலருக்கும் தங்கள் சேமிப்புக் கணக்கின் மீதான வட்டியை வங்கிகள் எவ்வாறு கணக்கிடுகின்றன என்பது தெரிவதில்லை. 2011ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சேமிப்புக் கணக்கின் வட்டி மீதான கட்டுப்பாடுகளை நீக்கும் முன்பு வரை அனைத்து வங்கிகளின் வட்டி விகிதமும் ஒன்றாக இருந்தன.

வங்கிகள் இப்போது தங்களின் சேமிப்புக் கணக்குகளின் மீதான வட்டியைத் தாமே நிர்ணயிக்கும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. இந்த வட்டி விகிதமானது ஒரு லட்சம் ரூபாய் வரை வைத்திருக்கும் கணக்குகளுக்கு ஒரே சீராக இருக்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வைத்திருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு வட்டி விகிதத்தை வங்கிகள் வழங்கலாம்.

இருப்பினும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) வங்கிக் கணக்கு மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

பழைய வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

முன்பெல்லாம் அதாவது ஏப்ரல் 1, 2010 வரை வங்கிகள் வட்டி விகிதத்தை வித்தியாசமான முறையில் கணக்கிட்டு வந்தன. இது உங்கள் கணக்கில் மாதத்தின் பத்தாம் தேதி முதல் கடைசி தேதி வரை உள்ள இருப்புத் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

இந்த முறை வாடிக்கையாளர்களுக்கு பயன் தருவதாக அமையவில்லை. உதாரணத்திற்கு 4 சதவீத வட்டி தரும் சேமிப்புக் கணக்கில் நீங்கள் ரூ.2,00,000 மாதம் முழுவதும் வைத்திருந்து 26ம் தேதி அன்று ரூ.1,80,000 எடுத்துள்ளீர்கள். இப்போது உங்களுக்கு ரூ.20,000 மீதான வட்டி ரூ.65 மட்டுமே கிடைக்கும்.

தற்போது வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

புதிய முறைப்படி தினசரி அடிப்படையில் உங்கள் கணக்கில் உள்ள இருப்புத்தொகை மீதான வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு திரட்டப்பட்ட வட்டி வங்கியைப் பொறுத்து காலாண்டிற்கு ஒரு முறை அல்லது அரையாண்டிற்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி காலாண்டிற்கு ஒருமுறை வங்கிகள் சேமிப்புக் கணக்கின் மீதான வட்டியை கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

புதிய முறை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதற்கான ஒரு ஒப்பீடு:

நாம் மேலே விவாதித்த அதே உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். வட்டி விகிதம் கணக்கிடுவதற்கான புதிய முறைப்படி உங்கள் கணக்கிலுள்ள ரூ. 2,00,000 இருப்பிற்கு 4 சதவீத வட்டி முப்பது நாட்களுக்கு ரூ.657 ஆகும்.

மாத வட்டி = பணத்தின் அளவு (தினசரி இருப்பு) * (மொத்த நாட்கள்) *வட்டி/ வருடத்தின் மொத்த நாட்கள் .

= 200000*30*4/100*365

=ரூ. 657.

பணத்தின் அளவு = ரூ.200000

மொத்த நாட்கள் = 30

வட்டி = 4/100

வருடத்தின் மொத்த நாட்கள் . = 365.

புதிய முறை வாடிக்கையாளர்களுக்கு நிச்சயமாக பயனளிக்கும் ஒன்று.

கட்டுப்பாட்டு நீக்கம் சேமிப்புக் கணக்கின் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வங்கிகளுக்கு இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to calculate interest on savings bank account? | உங்கள் வங்கி சேமிப்புக் கணக்குக்கு எப்படி வட்டியைக் கணக்கிடலாம்?

Many people do not know how banks calculate interest on their savings bank account. Till last year every bank had the same interest rates until the Reserve Bank of India in October 2011, deregulated the savings bank interest rate. Banks are now free to determine their savings bank interest rate, subject to uniformity being maintained upto Rs 1 lakh. A bank can provide differential rates of interest, savings bank deposits over Rs 1 lakh. However, interest rates for Non-Resident (External) Accounts Scheme and Ordinary Non-Resident will remain unchanged.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns