
பங்குகளை டீமாட் முறையில் மாற்றிக்கொள்வது எப்படி?
* டீமாட் கோரிக்கை விண்ணப்பம் ( டி.ஆர்.எஃப் )
* அச்சிடப்பட்ட பங்குகள் டீமாட் செய்யப்படுவதற்காக சரண் செய்யப்படுகிறது என்று குறிப்பிட வேண்டும்.
தனித்தனி ஐஎஸ்ஐஎன்(ISIN) குறியீடு கொண்ட பங்குகளுக்கு தனித்தனியாக டி.ஆர்.எஃப் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
டீமாட் கணக்கு எவ்வாறு இயங்குகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்:
பங்குகளை டீமாட் பங்குகளாக மாற்றும் முறை கீழ்கண்டவாறு செய்யப்படுகிறது.
* உங்களது டெபாசிட்டரி பங்காளரிடம் (டி.பி) அச்சிடப்பட்ட பங்குகளின் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
* டி.பி உங்களது கோரிக்கையை டெபாசிட்டரியின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.
* டி.பி உங்களது பத்திரத்தை நிறுவனத்தின் பதிவாளர் - பங்கு பரிமாற்ற முகவரிடம் (ஆர்.எஸ்.டி.ஏ) சமர்ப்பிக்கிறார்.
* ஏதேனும் ஆட்சேபம் இருந்தாலோ அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டாலோ ஆர்.எஸ்.டி.ஏ உங்களுக்கு அறிவிக்கிறார்.
* டெபாசிட்டரியில் இருந்து வரும் டீமாட் மாற்றக் கோரிக்கையை ஆர்.எஸ்.டி.ஏ. உறுதி செய்கிறார்.
* பங்குகளின் டீமாட் மாற்றம் முடிந்ததும் ஆர்.எஸ்.டி.ஏ. கணக்குகளை மாற்றம் செய்து டெபாசிட்டரிக்கு தகவல் அளிக்கிறார்.
* டெபாசிட்டரி தனது கணக்குகளில் மாற்றம் செய்து டி.பி.க்கு தகவல் தருகிறது.
* டி.பி. உங்களது டீமாட் கணக்கில் பங்குகளை வரவு வைக்கிறார்.
உங்களது பங்குகளின் டீமாட் மாற்றத்திற்காக உங்களது டி.பி. யை அணுகும் முன் எந்தெந்த பங்குகளை மாற்றிக்கொள்ள இயலும் என்பதை என்.எஸ்.டி.எல் மற்றும் சி.எஸ்.டி.எல் இணையதளங்களில் கண்டறியவும்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
அச்சிடப்பட்ட பங்குகளை மாற்றுவதற்கு பங்குப் பத்திரத்தில் உள்ள பெயரும், டீமாட் கணக்கு வைத்திருப்பவரின் பெயரும் ஒன்றாக இருத்தல் அவசியம்.
ஜாயின்ட் அகௌண்ட்டாக இருந்தால், பெயர்களின் வரிசை இரண்டிலும் ஒன்றாக இருக்க வேண்டும். இருப்பினும் பெயர் வரிசை மாற்றத்திற்கான விண்ணப்பத்தை டீமாட் மாற்ற விண்ணப்பத்துடன் இணைத்து அளிக்கலாம்.


Click it and Unblock the Notifications