பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது?

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது?
சென்னை: நீங்கள் இன்றளவும் உங்கள் பி.எஃப் கணக்கை மாற்றுவது, அந்த தொகையை பெறுவது குறித்த விவரங்களை பெற போராடிக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் விவரங்களை அறியலாம்.

(Wipro drops 10% after demerger of non IT-business)

 

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) என்றால் என்ன, இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

ஆர்.டி.ஐ அரசு அலுவகங்களில் இருந்து விவரங்களைப் பெறப் போராடும் சாதாரண மக்களுக்கு ஒரு முக்கிய கருவியாகும்.

ஆர்.டி.ஐ முலம் விவரங்களைப் பெறுவது எப்படி?

* அஞ்சலகத்திற்கு சென்று ரூ. 10க்கான மணி ஆர்டர் ஒன்றை எடுக்கவும். இந்தப் பணம் விண்ணப்பக் கட்டணமாக கருதப்படுகிறது.

* இந்த மணி ஆர்டரை சம்பத்தப்பட்ட இ.பி.எஃப் அலுவலகத்தின் பெயரில் எடுக்க வேண்டும் .

* உதாரணத்திற்கு பெங்களூரு இ.பி.எஃப் அலுவலகத்திற்கு அனுப்ப, இ.பி.எஃப் அலுவலகம் - பெங்களூரு என்ற பெயரில் மணி ஆர்டர் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இதற்கென குறிப்பிட்ட கடித அமைப்பு ஒன்றும் இல்லை, வெள்ளைத்தாள் ஒன்றில் எழுதினால் போதுமானது. இருப்பினும் பெயர், முகவரி சரியாக இருத்தல் அவசியம்.

பெறுனர்:

மத்திய பொது தகவல் அலுவலர்,

நல நிதி ஆணையர் அலுவலகம்,

தொழிலாளர் நல நிதி ஆணையம்,

(பி.எஃப் அலுவலக முகவரியைக் குறிப்பிடவும்.).

உங்கள் கடிதத்தில் இருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

* உங்கள் பெயர். பி.எஃப் கணக்கு எண், முழு முகவரி, தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடவும்.

* உங்கள் கேள்விகளை தெளிவாகவும், சரியாகவும் எழுதுவது நல்லது.

* கடிதத்தில் "நான் ஒரு இந்தியக் குடிமகன். இந்த விண்ணப்பத்தைப் பெற்ற 30 நாட்களுக்குள் இந்த விவரங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என அறிவித்து ஒப்பிடுதல் வேண்டும்.

* பி.எஃப் அலுவலகத்தின் பெயரில் ரூ.10க்கான மணி ஆர்டரை இணைத்திருப்பதை கடிதத்தில் குறிப்பிடவும்.

* தேவைப்பட்டால் கடிதத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* விண்ணப்பக் கட்டணத்தை சரி பார்த்துக் கொள்ளவும். இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்

இந்த கடிதத்தை பதிவுத் தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியரில் அனுப்பினால் ஏற்கப்படாது. உறுதிப்படுத்தும் நகலைக் கேட்டுப்பெற மறக்க வேண்டாம்.

ஆன்லைனில் விண்ணப்பித்தல்:

இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சலகம் செல்வதை கஷ்டமாகக் கருதுபவர்கள் ஆர்டிஐ நேஷன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அந்த இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, பூர்த்தி செய்து கையெழுத்திட்டு, ஸ்கேன் செய்து சாதாரண தபால் மூலம் பி.எஃப் அலுவலகத்துக்கு அனுப்பலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 150.

பி.எஃப் மாற்றங்களுக்கு இரண்டு ஆர்.டி .ஐ விண்ணப்பங்கள் தேவைப்படலாம்.

ஒருவேளை நீங்கள் இருவேறு இடங்களில் உள்ள இருவேறு அலுவலகங்களில் வேலை செய்திருந்தால் நீங்கள் இரண்டு முறை விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் டெல்லி மற்றும் பெங்களூரில் வேலை செய்து இருந்தால் நீங்கள் முதலில் டெல்லியிலும் பின்னர் பெங்களூரிலும் விண்ணப்பம் செய்ய வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rti
English summary

How to file an RTI for EPF withdrawal or transfer claim status? | பிஎஃப் கணக்கு விவரங்களை ஆர்டிஐ மூலம் எப்படி பெறுவது?

RTI is very vital tool for common people who are struggling to get details from government office. You can get details about your PF account transfer and withdrawal through RTI.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X