சிபில் ஸ்கோர் நல்லா இருந்தால் தான் கடன் கிடைக்கும் தெரியுமா?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிபில் ஸ்கோர் நல்லா இருந்தால் தான் கடன் கிடைக்கும் தெரியுமா?
சென்னை: நீங்கள் எப்போது கடன் வாங்கினாலும் கடன் தரும் நிறுவனம் கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட் (சிபில்) போன்ற கடன் அறிக்கை தாக்கல் செய்யும் நிறுவனங்களுக்கு தகவல்களை அளிக்கின்றன. நீங்கள் கடனை நிலுவையில் வைக்காமல் கடன் பொறுப்புகளை சரியான முறையில் பூர்த்தி செய்தால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருக்கும். கடன் பெறுவதற்கான உங்கள் தகுதி அதிகரிக்க ஒரு நல்ல சிபில் ஸ்கோர் முக்கியமாகும். இது குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் கடன் அல்லது கடன் அட்டை பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

 

(Why Chit Funds should not be abolished?)

உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க உதவும் சில வழிகள்:

கடனை நிலுவையில் வைப்பதையும் தாமதமாக செலுத்துவதையும் தவிர்த்தல்:

உங்கள் சிபில் ஸ்கோரை அதிகரிக்க விரும்பினால் கடனை தாமதமாக செலுத்துவதையும், நிலுவையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். தவணை செலுத்த மறப்பதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைக்க வேண்டும். உங்களது தவணை செலுத்தும் வரலாற்றின் தாக்கம் சிபில் ஸ்கோர் மீது அதிகம் உள்ளது.

அதிகபட்ச வரம்பை அடைவதை தவிர்த்தல்:

நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்து அதன் உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் என்றிருந்தால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் உச்ச வரம்பை எட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்காதீர்கள். இந்த சமயங்களில் கிரெடிட் கார்டை உபயோகிப்பதை கூடுமானவரை தவித்துவிடுங்கள். நீங்கள் கிரெடிட் கார்டை அதிகபட்ச வரம்பு வரை உபயோகிப்பீர்களானால் கிரெடிட் கார்டு மற்றும் அது போன்ற கடன் உபகரணங்களை நீங்கள் சார்ந்து இருப்பதை இது காட்டுகிறது. இறுதியாக இது உங்கள் சிபில் ஸ்கோரை பாதிக்கிறது

பிணை இல்லாக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை தவிர்த்தல்:

வீட்டுக் கடன் வாங்குவதில் தவறில்லை. ஆனால் கிரெடிட் கார்டு போன்ற பிணையில்லாக் கடன்கள் உங்கள் சிபில் ஸ்கோரை குறைக்கக்கூடும். இது போன்ற கடன்கள் எளிதில் கிடைக்கின்றன. எனவே முடிந்தவரை பிணையற்ற கடன்களைத் தவிருங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட கடன்களை தவிர்த்தல்:

வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றை ஒன்றாக எடுப்பதை முடிந்த வரை தவிர்ப்பது சிறந்தது. இது நீங்கள் கடனைச் சார்ந்தே இருக்கிறீர்கள் என்பதை நன்றாகக் காட்டுகிறது. வீட்டுக் கடன் போன்ற நீண்ட கால கடன் எடுக்கும் திட்டம் இருந்தால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்த அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: loan கடன்
English summary

How to improve your CIBIL score? | சிபில் ஸ்கோர் நல்லா இருந்தால் தான் கடன் கிடைக்கும் தெரியுமா?

Whenever you take loans, a data is submitted by lenders to credit reporting agencies like CIBIL (Credit Information Bureau India Limited) on a regular basis. If you have not defaulted and honoured your debt obligations, you are likely to get a good credit score. A good CIBIL score is important to improve your creditworthiness if you are planning to take a loan. A bad score means you are going to find it increasingly hard to get a loan or credit card.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X