
(5 top gold ETFs that investors could buy)
குறிப்பாக நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணத்தை எடுத்தால், பணத்தை எடுத்த நாளிலிருந்து அந்த பணத்திற்கு வட்டி விதிக்கப்படும். அதுபோல் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்திவிட்டால், மீதியுள்ள செலுத்த வேண்டிய பணத்திற்கு பொருட்களை வாங்கிய தேதியிலிருந்து வட்டி கட்ட வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஜனவரி 15ம் தேதி அன்று ஒருவர் கிரெடிட் கார்டு மூலம் ரூ.15,000க்கு பொருட்களை வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தொகையை திருப்பிச் செலுத்த 45 கிரேஸ் நாட்களை பொதுவாக வங்கிகள் அவருக்கு வழங்கும். ஆனால் 45 நாட்களுக்குப் பிறகு அந்த தொகையை அவர் செலுத்தினால் அந்த தொகைக்கு அவர் 2.95 சதவீதம் வட்டியை செலுத்த வேண்டும்.
நீங்கள் அதில் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால், நீங்கள் செலுத்தாத தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும். அதுபோல் மீண்டும் கிரெடிட் கார்டு மூலமாக பொருட்கள் வாங்கினாலும் அதற்கும் அவ்வாறே வட்டி விதிக்கப்படும். மேலும் பொருளை வாங்கிய நாளிலிருந்து, அந்த தொகையை திருப்பிச் செலுத்தும் நாள் வரைக்கும் உள்ள காலத்திற்கு வட்டி விதிக்கப்படும்.
தாமதமாக செலுத்தும் பில்களுக்கு, குறிப்பாக எத்தனை நாட்களுக்கான வட்டியைச் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களை வங்கியை அணுகிக் கேட்கலாம்.
குறிப்பிட்ட நாட்களுக்குள் வங்கியிலிருந்து, கிரெடிட் கார்டு அறிக்கையை ஒருவர் பெறவில்லை என்றால், அவர் ஒரு டூப்ளிகேட் அறிக்கையைக் கேட்டுப் பெற வேண்டும். அல்லது நாட்களைக் கணக்கிட்டு உரிய காலத்தில் பணத்தைத் திருப்பச் செலுத்த வேண்டும். நீங்கள் தாமதமாக கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு, கிரெடிட் கார்டு அறிக்கை தாமதமாக வந்தது என்று காரணம் சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications