
அவர்களின் சம்பளத்திலேயே இலவச ஹெல்த் கவர் வழங்கப்படுவதால் வேறொரு தனி ஹெல்த் பிளானைப் பற்றி அவர்கள் கண்டு கொள்வதில்லை.
மேலும் அவ்வாறு தனி ஹெல்த் பிளானில் சேருவது என்பது பண விரயம் என்றும் எண்ணுகின்றனர். வேலை செய்யும் நிறுவனமே இலவச ஹெல்த் கவர் பிளானை வழங்குவதால், ஏன் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.
உண்மையில் அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது. ஆனால் அந்த இலவச ஹெல்த் பிளான் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவர்களின் நிறுவனங்கள் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் ரூ.2 முதல் 5 லட்சம் வரை மட்டுமே கவர் செய்யும்.
ஆனால் இந்த தொகை குடும்பத்தின் மருத்துவச் செலவுக்கு போதுமானதாக இருக்காது. எடுத்துக்காட்டாக புற்று நோய் போன்ற கொடிய நோய்களுக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.10 லட்சம் தேவைப்படும். ஆனால் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மட்டுமே கிடைக்கும்.
இந்த நிலையில் மீதமுள்ள ரூ.5 லட்சத்திற்கு என்ன செய்வது? இந்த தொகையை யார் தருவார்? குறைந்த அளவில் மாத சம்பளம் வாங்கும் ஒருவர் இந்த தொகையை செலுத்த முடியுமா? மேலும் நிறுவனத்தில் வாழ்நாள் முழுவதும் பணி செய்தால்தான் நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளான் செல்லுபடியாகும்.
தற்போதைய சூழலில் ஏராளமான பணி நீக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் பலர் நீண்ட காலத்திற்கு ஒரே நிறுவனத்தில் வேலை செய்வதில்லை. ஆகவே குடும்பத்தின் ஆரோக்கியத்தை யார் பாதுகாப்பது? வேலை பார்க்கும் நிறுவனம் அதற்கு முழுமையான உத்திரவாதத்தை வழங்காது.
அடுத்ததாக பணியிலிருந்து ஓய்வு பெறும் போது இந்த இலவச ஹெல்த் பிளான் தானாகவே காலாவதியாகிவிடும். ஓய்வுக்கு பின்னர் பென்ஷன் பெறலாம். ஆனால் மருத்துவ செலவுகளை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வு பெற்ற பின்னர் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்குவது என்பது சாத்தியமாகாத காரியமாகும். அவ்வாறு ஓய்வு பெற்ற பின் ஒரு புதிய ஹெல்த் பிளானை வாங்கினாலும், அந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் அதிகமான நோய்களை ஹெல்த் பிளான் கவர் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் அதிகமான பிரீமியம் தொகையைச் செலுத்த வேண்டும். ஓய்வுக்கு பின்னர், பென்ஷன் தொகையில் அதிக பிரீமியம் தொகையைச் செலுத்துவது என்பது முடியாத காரியம் ஆகும்.
எனவே வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கும் ஹெல்த் பிளான் கவர்ச்சிகரமானதாக தெரிந்தாலும், குடும்ப ஆரோக்கியத்திற்காக தனியான ஹெல்த் பிளானை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். மேலும் இந்த ஹெல்த் பிளானை புதுப்பித்துக் கொண்டே வந்தால் ஓய்வு பெற்ற பின்னரும் இந்த பிளான் தொடர்ந்து வரும். எனவே நிறுவனம் வழங்கும் இலவச ஹெல்த் பிளானைத் தவிர்த்து ஒரு புதிய ஹெல்த் பிளானில் சேருவது சாலச் சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications