குழந்தைகளின் படிப்புச் செலவைக் கவனிக்கும் ஜீவன் அனுராக்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் கல்விச் செலவை நினைத்து கவலையா? ஜீவன் அனுராக் இருக்கு
சென்னை: குழந்தைகளின் படிப்புச் செலவிற்கான கட்டணங்களைச் செலுத்துவது என்பது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சுமையாக இருக்கிறது. ஆனால் எல்ஐசி வழங்கும் ஜீவன் அனுராக் திட்டம் இந்த சுமையை மிக எளிதாக்குகிறது. இந்த ஜீவன் அனுராக் திட்டத்தில் இணைந்தால் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை எல்ஐசி நிறுவனமே கவனித்துக் கொள்ளும். இந்த ஜீவன் அனுராக் திட்டத்தை தந்தையோ அல்லது தாயோ யாராவது ஒருவர் தங்கள் பெயரிலேயே தங்களின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தோடு வாங்கலாம்.

 

(SBI Gold deposit scheme: 6 reasons to invest )

இந்த திட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தில் குறிக்கப்பட்டிருக்கும் காலமான அதாவது பாலிசி காலம் முதிர்வு பெறும் போது அல்லது பாலிசி காலம் முடிவதற்கு முன்பே பாலிசிதாரர் இறந்துவிட்டால் இந்த திட்டத்தில் சேமித்த பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு இந்த திட்டம் ஒருசில உடனடி அவசரகால செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அதாவது பேசிக் சம் அஸ்யூர்ட் தொகையை பாலிசி காலத்திலேயே வழங்குகிறது.

உறுதியான நன்மை

முதிர்ச்சி காலத்திற்கு முன்பே பாலிசி காலத்தின் இறுதி 3 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 20 சதவீத பேசிக் அஸ்யூர்ட் தொகையை இந்த திட்டம் வழங்குகிறது.

பாலிசி முதிர்வு பெறும் போது, ரிவர்சனரி போனஸ் மற்றும் டர்மினல் போனசோடு சேர்த்து 40 சதவீத பேசிக் அஸ்யூர்ட் தொகையும் வழங்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு பாலிசியின் காலம் 20 ஆண்டுகள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானல் பாலிசியின் காலத்தில் வரும் 17, 18 மற்றும் 19 ஆகிய ஆண்டுகளின் தொடக்கத்தில் 20 சதவீத அஸ்யூர்ட் தொகை வழங்கப்படும். அதோடு பாலிசி காலம் முதிர்வு அடையும்போது அதாவது 20வது ஆண்டின் முடிவில், ரிவர்சனரி போனஸ் மற்றும் டெர்மினல் போனஸ் ஆகியவற்றோடு சேர்த்து 40 சதவீத சம் அஸ்யூர்ட் தொகையும் வழங்கப்படும்.

இறப்பின் போது பெறும் நன்மை

பாலிசிதாரர் இறந்துவிட்டால், உடனடியாக பேசிக் அஸ்யூர்ட் தொகைக்கு சமமான தொகை வழங்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: lic எல்ஐசி
English summary

Jeevan Anurag: A good plan to cover a child's education | குழந்தைகளின் கல்விச் செலவை நினைத்து கவலையா? ஜீவன் அனுராக் இருக்கு

The paramount worry of parents has always been to meet the educational needs of their children. LIC's Jeevan Anurag is a good profits plan that can fulfill the objective. It is a with profits plan specifically designed to take care of the educational needs of children. The plan can be taken by a parent on his or her own life. Benefits under the plan are payable at pre-specified durations irrespective of whether the Life Assured survives to the end of the policy term or dies during the term of the policy. In addition, this plan also provides for an immediate payment of Basic Sum Assured amount on death of the Life Assured during the term of the policy.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?