என்சிடி, வங்கி பிக்சட் டெபாசிட்: இதில் எது சிறந்தது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்சிடி, வங்கி பிக்சட் டெபாசிட்: இதில் எது சிறந்தது?
சென்னை: மாற்றவியலாத கடனீட்டுப் பத்திரங்கள் (என்சிடி) என்பன நிறுவனங்கள், தங்கள் மூலதனத்தை உயர்த்திக் கொள்வதற்காக வழங்கும் கடன் திட்டங்களாகும். என்சிடி-க்கள், ‘பாதுக்காப்பான என்சிடி-க்கள்' மற்றும் ‘பாதுகாப்பற்ற என்சிடி-க்கள்' என்று இரு வகைப்படும்.

 

பாதுக்காப்பான என்சிடி என்பது நிறுவனத்தின் சொத்துக்களை மூலாதாரமாகக் கொண்டது. அந்த நிறுவனம் திவாலானால் அது தனது சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை அளிக்கும். அதுவே பாதுகாப்பற்ற என்சிடிக்கள் என்றால் பணம் அம்பேல் தான்.

என்சிடிக்களை, வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுடன் (எஃப்டி) ஒப்பிட்டுப் பார்ப்போம்.

வெவ்வேறு நிறுவனங்களின் என்சிடி லாபக் கணக்குகள்

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட்

ஃபேஸ் வேல்யு: ரூ. 1000

கூப்பன் விகிதம்: 12%

தவணை முடிவில் கிடைக்கும் லாபம்: 27.12%

மீட்பு தேதி: 12/10/12

முதலீட்டாளர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டித் தொகை, படிப்படியாகச் சேர்ந்து, வருடத்திற்கொரு முறை முதலீட்டுத் தொகையுடன் இணைக்கப்படும்.

மதிப்பீடுகள்: கேர் மதிப்பீடு - கேர் ஏஏ; ப்ரிக்வொர்க் மதிப்பீடு - பிடபிள்யூஆர் ஏஏ

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட்

ஃபேஸ் வேல்யு: ரூ. 1000

கூப்பன் விகிதம்: 11.50%

தவணை முடிவில் கிடைக்கும் லாபம்: 16.90%

மீட்பு தேதி: 25/08/14

வட்டி வழங்க வேண்டிய நாள்: 1/04/012

மதிப்பீடுகள்: க்ரிஸில் மதிப்பீடு - க்ரிஸில்-ஏஏ-/ நிலையானது, கேர் மதிப்பீடு - கேர் ஏஏ

1 முதல் 3 வருடங்களுக்கான வங்கி எஃப்டி விகிதங்கள்

ஐசிஐசிஐ

உரிமைக் காலம்: 1-3 வருடங்கள்

வட்டி விகிதங்கள்: 7.00% - 8.75%

எஸ்பிஐ

உரிமைக் காலம்: 1-3 வருடங்கள்

வட்டி விகிதங்கள்: 7.50% - 8.50%

மேலே விளக்கப்பட்டுள்ளதிலிருந்து என்சிடி மூலமே அதிக லாபம் கிடைக்கிறது என்பது தெளிவாகிறது. கீழே தரப்பட்டுள்ள பொருட்சுருக்கம், என்சிடி-க்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பினும், வங்கி டெபாசிட்டுகளோடு ஒப்பிடுகையில், என்சிடி-க்கள் அபாயகரமானவை என்பதை தெளிவாக்கும்.

வட்டி விகிதங்கள்: என்சிடி-க்கள் தரக்கூடிய வட்டி விகிதங்கள், வங்கி பிக்சட் டெபாசிட்டுகளை(எஃப்டி) விட எப்போதும் அதிகமாகவே உள்ளன. வட்டி விகிதங்கள் சரிந்து வரும் தற்போதைய சூழலில் என்சிடி-க்கள் மிக நல்ல முதலீடாகவே இருக்கும்.

அபாயம்:

பிக்சட் டெபாசிட்டோடு ஒப்பிடுகையில் என்சிடி-க்களின் அபாய நிலை அதிகமே. அதனாலேயே பாதுகாப்பற்ற என்சிடி-க்கள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன; ஏனெனில், நிறுவனம் திவாலாகும் பட்சத்தில் இவ்வகை என்சிடி-க்களுக்கு மூலாதாரச் சொத்துக்கள் எதுவும் இல்லாமையால் இவை மிக அபாயகரமானவை.

பாதுகாப்பான என்சிடி-க்கள் எனில், அவற்றின் மூலாதாரமாக உள்ள சொத்துக்களை விற்று என்சிடி உரிமையாளர்களுக்குத் தர வேண்டிய தொகை கிடைக்க ஏற்பாடு செய்யலாம். எனினும், வங்கி பிக்சட் டெபாசிட்டுகள் ஆர்பிஐ-இன் வழிகாட்டுதலின்படி ரூ. 1 லட்சம் வரை பாதுகாப்பு உடையனவையாய் விளங்குகின்றன.

எளிதில் பணமாக்கக் கூடிய வாய்ப்பு:

என்சிடி-க்களுக்கு வங்கி பிக்சட் டெபாசிட்டுகளை விட எளிதில் பணமாக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே உள்ளது. என்சிடி-க்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படுகின்றன; ஆனால் குறைந்த அளவிலேயே விற்கப்படுகின்றன. ஒருவர், அதிகமான அளவில் இவற்றை விற்கத் தலைப்பட்டால், அவ்வாறு அனைத்தையும் விற்க இயலாது. வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கே எளிதில் பணமாக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. வேறு எந்த சொத்துக்கும், வங்கி பிக்சட் டெபாசிட்டைப் போல் இவ்வளவு அதிக வாய்ப்பு கிடையாது.

 

எனினும், வங்கி பிக்சட் டெபாசிட்டுகள் எளிதாக பணமாக்கக் கூடியதாக இருப்பினும் இதனை தவணை காலத்துக்கு முன் வங்கியில் இருந்து எடுக்க நேரிட்டால் அதற்கு அபராதத் தொகை செலுத்த வேண்டி இருக்கும்.

வரி:

பிக்சட் டெபாசிட்டுகளைப் போன்று இல்லாமல் டீமாட் வடிவில் இருக்கும் என்சிடி-க்களிலிருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படுவதில்லை. என்சிடி-க்கள் மூலம் கிடைக்கும் லாபம், வருமான வரிச் சட்டத்தின் கீழ், வருமானமாகக் கருதப்படுகிறது. பிக்சட் டெபாசிட்டுகளுக்கும் இது பொருந்தும்.

ஒரு வேளை, நீங்கள் உங்கள் கடனீட்டுப் பத்திரத்தை ஒரு வருடத்திற்குள் விற்க நேரிட்டால் அது குறைந்த கால மூலதன லாபமாகக் கருதப்பட்டு, அதற்கு வரி விதிக்கப்படுகிறது. அதுவே, ஒரு வருடத்திற்குப் பின் ஆனால் தவணைக் காலம் முடியும் முன் விற்கப்பட்டால், அது நீண்ட கால மூலதன லாபமாகக் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: fixed deposits bank
English summary

NCDs Vs Bank Deposits: Which is better? | என்சிடி, வங்கி பிக்சட் டெபாசிட்: இதில் எது சிறந்தது?

Non convertible debentures are debt instruments issued by company to raise capital. There are two types of NCDs-secured and unsecured. A secured NCD is backed by the assets of the company and if it fails to pay, the investor who is holding the debenture can claim it by liquidation of these assets. GoodReturns.in compares NCDs and bank fixed deposits
Story first published: Thursday, April 18, 2013, 16:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X