விரைவாக இன்சூரன்ஸ் செட்டில்மென்ட் பெற சில டிப்ஸ்

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

விரைவான இன்சூரன்ஸ் செட்டில்மென்ட்டுக்கு சில டிப்ஸ்கள்
சென்னை: முந்தைய இன்சூரன்ஸ் செட்டில்மென்ட்டின் போது உண்டான பயமுறுத்தும் அனுபவங்களால் எரிச்சலுற்ற நீங்கள் எதிர்காலத்தில் வேகமாக செட்டில்மென்ட் பெற ஆவன செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள் போன முறை செய்த அதே தவறுகளை மீண்டும் செய்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நம்மில் பலர் செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஆச்சர்யம் என்னவென்றால் நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தால் இழப்பீடு கோருவது மிக எளிதாக முடியும். மேலும் நாம் எச்சரிக்கையோடு, அவசர காலத்திற்கு தேவையான ஏற்பாடுகளை தயாராக செய்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நம்மில் பலர் ஏற்பாடுகளைச் செய்ய கடைசி நிமிடம் வரை காத்துக் கொண்டிருப்பார்கள். நீங்களும் இந்த வட்டத்திற்குள் வருவீர்களானால் தொடர்ந்து படித்து இழப்பீடு கோருவதற்கான பயனுள்ள குறிப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள். (Are IPL teams on a strong wicket financially?)

தயார் படுத்துதல்:

கேட்க எளிதாக இருந்தாலும் ஒருவர் தரக் கூடிய மிகச்சிறந்த குறிப்பு இது தான். உங்கள் உடமைகளை நீங்கள் காப்பீடு செய்திருந்தால் அந்த விவரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் பெயரில் இன்சூரன்ஸ் செய்ய இருக்கிறீர்களானால் வீட்டையு, வீட்டில் உள்ள பொருட்களையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த அலங்காரப் பொருட்கள் இருக்குமானால் உங்கள் வீட்டை வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒன்று.

ஏனென்றால் பெரும்பாலும் பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீடு கோரும்போது அவற்றை உறுதி செய்ய இயலாமல் போவதால் அவை நிராகரிக்கப்படுகின்றன. உங்களிடம் ஒரு விலை உயர்ந்த தரை விரிப்பு இருந்து அது தீயில் நாசமாகிப் போனால் காப்பீட்டு நிறுவனம் உங்களிடம் அது இல்லவேயில்லை என்று வாதிட இயலும். இந்தக் காரணத்திற்காகவே உங்களுக்கு ஆவணங்கள் தேவைப்படுகின்றன. பேராபத்து ஏதும் வரும் முன்பாகவே இந்த ஆவணங்களை சேகரித்து பத்திரமாக வைக்க வேண்டும். விற்பனைப் பத்திரங்கள், ரசீதுகள் ஆகியவற்றையும் எந்நேரமும் எளிதில் கையாளும் வகையில் வைக்க வேண்டும்.

நகல் எடுத்தல்:

உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் நகல் எடுத்து வைக்க வேண்டும். பெரும்பாலும் முக்கிய ஆவணங்கள் தீ விபத்து, திருட்டு மற்றும் பேரழிவு சமயங்களில் தொலைந்து போகின்றன. ஆவணங்கள் இல்லாமல் காப்பீடு கோருவது மிகக் கடினமான வேலையாகும். ஆகையால் உங்கள் காப்பீடு கோரிக்கை எளிமையான முறையில் முடிவதை உறுதி செய்யும் வகையில் உங்கள் ஆவணங்களை பல நகல்கள் எடுத்து பல இடங்களில் வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து ஆவணங்கள் மற்றும் ப்ரீமியம் ரசீதுகள் ஆகியவற்றின் நகல் எடுத்து காலக்கிரம வரிசைப்படி அவற்றை கோப்புகளில் வரிசைப்படுத்தி வைக்கவும். சுகாதாரக் காப்பீடு வைத்திருப்பின் உங்களுக்கும் உங்கள் துணைவருக்கும் இன்சூரன்ஸ் நிர்வாகம் தந்த அடையாள அட்டைகளை (டிபிஏ ஐ.டி கார்டு) அவசர காலங்களில் உடனடியாக உபயோகப்படுத்தும் வகையில் வைக்கவும்.

முகவர்களுடனான தொடர்பு:

ஒரு இன்சூரன்ஸ் முகவர் ஒரே சமயத்தில் பல வாடிக்கையாளர்களுடன் வேலை செய்கிறார். எனவே எல்லா சமயங்களிலும் உங்களின் முகவருடைய கவனதிற்குரியவராக நீங்கள் இருக்கும்படி அமையச் செய்ய வேண்டும். முகவரை அழைத்து பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். காப்பீடு கோர வேண்டி வந்தால் உங்கள் முகவர் உங்களை தொடர்பு கொள்ளும் வரை காத்திருக்க வேண்டாம். அடிக்கடி முகவரை அழைத்தும் நேரில் சந்தித்தும் உங்கள் கோரிக்கை முன்னிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.

காப்பீட்டு கோரிக்கை பற்றி முகவர் கூறும் அனைத்தையும் குறித்துக் கொள்ளவும். சந்திப்பு முடிந்தவுடன் விவாதித்த புள்ளிவிவரங்களை முகவருக்கு மின்னஞ்சல் செய்யவும். முகவர்களும் காப்பீட்டு நிறுவனங்களும் பெரும்பாலும் பொய்யான வாக்குறுதிகளை தந்து உங்களை பாலிசிகளை வாங்கும்படி வசியம் செய்கிறார்கள். எனவே அவர்கள் சொல்லும் விஷயங்களுக்கு அவர்களை பொறுப்பாளி ஆக்குங்கள். இவ்வாறு செய்வதால் காப்பீட்டு கோரிக்கை நிராகரிக்கப்படுவதை தவிர்க்கலாம்.

பிரீமியம் செலுத்துதல்:

உங்கள் பிரீமியத்தை சரியான சமயத்தில் செலுத்துவதை உறுதி செய்யவும். காப்பீட்டு நிறுவனம் நீங்கள் செலுத்திய அனைத்து பிரீமியத்தையும் பெற்றுக் கொண்டது என்பதை உறு திசெய்யவும். எல்லா ரசீதுகளையும் பெற்று கோப்புகளில் பத்திரப்படுத்தி வைக்கவும். காப்பீட்டு கோரிக்கையின்போது இது உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

நேர்மையாக இருத்தல்:

பெரும்பாலான காப்பீட்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவது பாலிசி படிவங்களை நிரப்பும் சமயங்களில் பாலிசிதாரர்கள் பொய் சொல்வதாலோ அல்லது உண்மையை மறைத்து வைப்பதாலோ தான். நீங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க முடிவு செய்திருந்தால் உங்கள் உண்மையான உடல் நிலை மற்றும் கடந்த கால மருத்துவ விவரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிவிக்கவும். தேவையான கட்டணங்களை சரியாக செலுத்தவும். மேலும் உங்களது காப்பீட்டு கோரிக்கை விரைவாக தீர்க்கப்பட விரும்பினால் முரண்பாடுகளில் சிக்காமல் இருக்கவும். எந்த காப்பீட்டு நிறுவனமும் உங்களுடைய பின்னணியை முறையாக ஆராயாமல் பணம் தருவதில்லை. எனவே நீங்கள் நேர்மைக்கு புறம்பானவராக இருந்தால் இழப்பு உங்களுக்கே. ஆயுள் காப்பீடாக இருந்தாலும் பிற காப்பீடுகளாக இருந்தாலும் காப்பீட்டு கோரிக்கையை தீர்வு செய்வது கடினமானது அல்ல. நீங்கள் சீராக ஆராய்ந்து முன்னேற்பாடுடன் இருந்தாலே போதும். உங்களிடம் சரியான ஆவணங்களும், சாட்சியங்களும் இருந்தால் எந்த காப்பீட்டு நிறுவனமும் உங்களது பணத்தை தர மறுக்க இயலாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

எனவே விழிப்புடன் இருந்து மேற்கூறிய குறிப்புகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் காப்பீட்டு கோரிக்கைகளை உங்களால் விரைவில் தீர்வு செய்ய இயலும்.

(கட்டுரையாளர் தீபக் யோஹன்னன். கட்டுரை ஆசிரியர் இன்சூரன்ஸ் விலை மற்றும் அம்சங்களை ஆன்லைனில் ஒப்பிடும் MyInsuranceClub.com இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Quick tips for quick insurance settlements | விரைவான இன்சூரன்ஸ் செட்டில்மென்ட்டுக்கு சில டிப்ஸ்கள்

Exasperated by the harrowing experience you had while settling your last insurance claim, you want to ensure you do everything to get a faster settlement in the future. But do you realize you are making the same mistakes you did the last time? I say this because most of us tend to make the same mistakes over and over again. Interestingly, claims can be settled easily if we just are a bit more alert. Also, we need to be careful and organized before there is an emergency, but sadly most of us wait till the 11th hour to get organized! If you too find yourself in this bracket, read on and get some very handy tips about quick claim settlements.
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns