வருமான வரி சட்டத்தின் கீழ் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி சட்டத்தில் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள்
சென்னை: மக்கள் தங்கள் வரி சேமிப்பு முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். வரிச் சுமையை சட்டப்பூர்வமான வழிகளில் குறைத்த பின், முறையான வரியை செலுத்துவது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். அதனால், வரிவிதிப்பு வளையத்திற்குள் உள்ள அனைவருக்கும் வரிக்கான திட்டமிடுதல் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், வரியைக் குறைப்பதோடல்லாமல், சிறந்த வரவையும் கொடுக்கவல்ல திட்டத்தை சரியாகத் தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியமானதாகும். அவ்வாறு வரியைக் குறைக்க பயன்படக்கூடிய சிறப்பான வருமான வரிச் சட்டப் பிரிவுகள் சிலவற்றை பின் வருமாறு பார்க்கலாம்.

 

(5 top gold ETFs that investors could buy )

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவு:

இப்பிரிவில் ரூ. 1 லட்சம் உச்சவரம்பாகக் கூறப்பட்டுள்ளது. இது ஒரே குடையின் கீழ் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் அரசு உள்கட்டமைப்பு கடன் பத்திரங்கள் ஆகியவை, இப்பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கக் கூடியவை ஆகும். இப்பிரிவு, வரியை சேமிக்க உதவும் பல முறைகளில் முதலீட்டாளர்கள் மிக விரும்பும் ஒரு முறையாக விளங்குகிறது. ஒருவர் 30 சதவீத வரிவிதிப்பு வளையத்திற்குள் இருந்து ரூ. 1 லட்சத்தை 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர் எளிதாக ரூ. 30,000 வரியை சேமிக்க முடியும். இந்த சட்டப் பிரிவு கீழ்கண்ட முறைகளுள் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யும்போது செயல்படக்கூடியதாகும்.

• ஆயுள் காப்பீட்டில் முதலீடு

• பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி)

• என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்)

• திருப்பிச் செலுத்தும் கடன் தவணைத் தொகையை அசலில் அனுசரித்தல்

1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் 80 டி பிரிவு:

மெடிக்ளைம் திட்டத்தில் ஒருவர், சுமார் 15,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய் வரை வரிக்குறைப்பு பெறலாம். இது 80சி பிரிவில் பெறப்பட்ட வரிக்குறைப்பு போக, 80டி பிரிவில் பெறக்கூடிய வரிக்குறைப்பாக தனிப்பட்டு விளங்குகிறது.

1961ம் ஆண்டு வருட வருமான வரிச் சட்டப் பிரிவு 24:

வீட்டுக் கடனுக்கான வட்டியான உச்சவரம்பு ரூ. 150000த்தை செலுத்தினால் அதற்கேற்றவாறு உங்கள் வருமானத்திலிருந்து வரி விலக்கு பெறலாம்.

80சிசிஎஃப் பிரிவு:

ஒருவர், அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளான உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வாரேயானால், அவருக்கு 80 சி-பிரிவின் கீழ் பெறும் வரிக்குறைப்போடு, கூடுதலாக ரூ. 20,000 வரை அவரது வரிவிதிப்பிற்குட்ட வருமானத்திலிருந்து, இதன் கீழ் வரி குறைப்பு செய்யலாம். எனினும், இத்திட்டங்களில் கட்டாயக் காலவரையறைகள் உண்டு என்பதை முதலீடு செய்யும் முன் நினைவில் கொள்ள வேண்டும்.

80இ பிரிவு:

இவ்வருமான வரிச் சட்டப்பிரிவின் கீழ் வரிவிதிப்புக்குரியவரின் கணவன்/மனைவி அல்லது பிள்ளைகளின் உயர் கல்விக்காகப் பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டித் தொகையை அவரின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானத்திலிருந்து குறைப்பதற்கு வழிவகை செய்யலாம்.

வருமானப் பகிர்ந்தளிப்பு முறை:

வெவ்வேறு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அவர்களிடையே பகிர்ந்தளிப்பது, புத்திசாலித்தனமானதொரு வரிச்சுமை தவிர்க்கும் முறையாகும். இம்முறை, ஒருவரை குறைந்த வருமான வளையத்திற்குள்ளே இருக்கும்படி செய்யும். வருமானத்தை, ஆண்களுக்கு 16,000 ரூபாயாகவும், பெண்களுக்கு 19,000 ரூபாயாகவும், மூத்த குடிமக்களுக்கு 24,000 ரூபாயாகவும் பகிர்ந்தளிப்பதன் மூலம், ஒருவர் மொத்தமாக அவரது வருமானத்தை ரூபாய் 49,000 வரை வரியின்றி அனுசரிக்க முடியும். ஆனால் இம்முறையை செயல்படுத்த வேண்டுமெனில் அனைத்து உறுப்பினர்களின் வருமானத்தையும் வரிவிதிப்பிற்கு உட்படுத்துவது அவசியம்

அன்பளிப்பு வரிக்கான திட்டமிடல்:

 

நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பெறப்படும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. அதனால் இச்சட்டத்தை பயன்படுத்தி ஒருவர் தன் வரியைக் குறைக்கலாம். இச்சட்டத்தின் நெளிவு சுளிவுகளை நன்கு புரிந்து கொள்வதன் மூலம் வருமான வரித்துறையின் நுண்ணாய்வு மற்றும் அபராத விதிப்பைத் தவிர்க்கலாம்.

முடிவாக:

வரி சேமிப்பு மட்டுமே ஒருவரின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. முதலில், தன் முழு நிதி நிலைத் திட்டமிடலை நன்றாக அலசி ஆராய்ந்த பின்னர், ஒரு பொருத்தமான சேமிப்புத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வரி விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் முதலீடானது சரியான கால அளவிலும், சரியான நிகர லாபத்தை அளிக்கக்கூடிய வகையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் நீங்கள் சிறப்பான வரி விலக்கை பெற இயலும்.

உங்கள் வரிக்கான திட்டமிடுதலின்போது, ஒரேயொரு சொத்து வகையின் கீழ் அனைத்தையும் வைக்காமல் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வேறு வகையான ஆக்கப்பொருள்களைக் கொண்டிருக்கும்படி பார்த்துக் கொண்டால், முதலீட்டுத் திட்டங்கள் பலவற்றில் பொதிந்துள்ள பல்வேறு வகையான அபாயங்களைத் தவிர்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax Savings Sections Under Income Tax Act | வருமான வரி சட்டத்தில் உள்ள வரி சேமிப்பு பிரிவுகள்

It is the duty of every Citizen to pay tax after using all the legal means to minimize the tax burden. Hence, Tax planning becomes important to everybody falling under the taxable zone. It is also very important to select the right tax saving instrument that can serve the purpose of tax saving along with good return on investment. Let’s check some important sections of Income Tax Act under which a person can save the tax.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X